டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும்?

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜீவ் காந்தி வழக்கில் 7 தமிழர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் மீது முடிவு எடுக்க தமிழக ஆளுநர் பன்வாரில் புரோஹித்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடக் கூடும் என தெரிகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை; ஆகையால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டு என உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

SC may order to TN Governor on Seven Tamils Release recommendation

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது 7 தமிழரை விடுதலை செய்யலாம் என தமிழக அரசின் பரிந்துரை மீது 2 ஆண்டுகாலம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முடிவு எடுக்காமல் இருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்தார் நீதிபதி நாகேஸ்வர ராவ்.

ராஜீவ் கொலை வழக்கு: 7 தமிழர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியும்: பேரறிவாளன் வழக்கறிஞர்ராஜீவ் கொலை வழக்கு: 7 தமிழர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியும்: பேரறிவாளன் வழக்கறிஞர்

மேலும் இன்றைய விசாரணையில் நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறியதாவது: அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தால் உத்தரவிட முடியுமா? இது தொடர்பான விவரங்களை பேரறிவாளன் வழக்கறிஞர் சங்கர நாராயணன் தாக்கல் செய்ய வேண்டும்.

ராஜீவ் வழக்கு: 7தமிழர் விடுதலை குறித்து முடிவு எடுக்காத தமிழக ஆளுநர்-உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி ராஜீவ் வழக்கு: 7தமிழர் விடுதலை குறித்து முடிவு எடுக்காத தமிழக ஆளுநர்-உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

அத்துடன் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதிலும் சட்டசபை தீர்மானங்கள் மீது முடிவு எடுப்பதிலும் தாமதம் ஏற்படும் நிலையில் விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்று ஆளுநர்களை நீதிமன்றம் கேட்டுக் கொள்ள முடியும் என 2014-ம் ஆண்டு சத்ருகன் சவுகான் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதையும் நீதிபதி நாகேஸ்வர ராவ் சுட்டிக்காட்டினார்.

ராஜீவ் கொலை: சிபிஐ-ன் சதி விசாரணைக்கும் 7 தமிழருக்கும் தொடர்பே இல்லை- உச்சநீதிமன்றம் திட்டவட்டம் ராஜீவ் கொலை: சிபிஐ-ன் சதி விசாரணைக்கும் 7 தமிழருக்கும் தொடர்பே இல்லை- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

இந்த மனு மீதான விசாரணை நவம்பர் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால் 7 தமிழர் விடுதலை தொடர்பாக விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு உத்தரவிடவே வாய்ப்புள்ளது என்கிறன உச்சநீதிமன்ற வட்டாரங்கள்.

English summary
According to the sources the Supreme Court may order to Tamilnadu Governor on Seven Tamils Release recommendation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X