ஆதார்-வாக்காளர் எண் “லிங்க்” கூடாது.. ராணுவ அதிகாரி வழக்கு! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணிகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்டத்தை தொடங்கியது. அப்போதே இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆதார் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பை நிறுத்துமாறு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

சட்டதிருத்தம்
இதற்கிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் சீர்திருத்த சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற்று சட்டமானதை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இணைப்பு பணி
ஆனால், இந்த மசோதாவுக்கு திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாட்டிலும் அரசு அதிகாரிகள், அரசு பள்ளி ஆசிரியர்கள் வீடு வீடாக சென்றும், சிறப்பு முகாம்களை அமைத்தும் துரிதமாக ஆதார் - வாக்காளர் அட்டை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டாயப்படுத்தல்
எதிர்ப்புகள் எழுந்த பகுதிகளில் கருத்துக் கேட்பு மற்றும் விளக்க கூட்டங்களை நடத்தி வருகின்றனர். பல பகுதிகளில் மக்களை கட்டாயப்படுத்தி இந்த இணைப்பு பணிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதன் மூலம் வாக்குரிமை பறிக்கப்படும் என்பன போன்ற பல்வேறு அச்சங்களை பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மத்திய அமைச்சர்
இது தொடர்பான செய்திகள் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளான நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆதார் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு கட்டாயம் இல்லை என்று கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்தார். தேர்தல் ஆணையமும் இந்த இணைப்பு கட்டாயம் இல்லை என்றே விளக்கமளித்தது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.ஓம்பத்கரே இதற்கு எதிராக பொதுநல மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஆதார் எண் இல்லாதவர்களுக்கு வாக்குரிமையை மறுக்கக்கூடாது என்றும், இணைப்பை கட்டாயப்படுத்தக்கூடாது என்று அவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சியாம் திவான் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு நோட்டீஸ்
இதனை விசாரணைக்கு ஏற்ற எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறும் உத்தரவிட்டது. அத்துடன் ஆதார் சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவுடன் இணைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications