Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் மோடியின் பயண ஆவணங்களை சேகரிக்க பஞ்சாப்-ஹரியானா ஹைகோர்ட் பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி பஞ்சாப்பில் மேற்கொண்ட பயணம் தொடர்பான ஆவணங்களை சேகரிக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடியின் பாதுகாப்பு குளறுபடிகள் தொடர்பான மனு மீது திங்கள்கிழமையும் விசாரணை தொடரும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி சாலை மார்க்கமாக சென்ற போது விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இதனால் பிரதமர் மோடியின் வாகனம் மேம்பாலம் ஒன்றில் 20 நிமிடம் காத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் பஞ்சாப் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு அவர் டெல்லி திரும்பினார். பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் நிகழ்ந்த குளறுபடிகளால்தான் அவரது பஞ்சாப் பயணம் ரத்தானது என விமர்சிக்கப்பட்டது. இதற்கு பஞ்சாப் மாநில அரசுதான் காரணம் என்கிறது மத்திய அரசு.

உச்சநீதிமன்றம் விசாரணை

உச்சநீதிமன்றம் விசாரணை

இதனிடையே பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பான மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது மனுதாரரான மூத்த வழக்கறிஞர் மன்விந்தர்சிங், பிரதமர் மோடியின் பதின்டா முதல் ஃபெரோஸ்பூர் மற்றும் ஹூசைனிவாலா பயணங்கள் தொடர்பான ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் உதவியுடன் மாவட்ட மாஜிஸ்திரேட் பாதுகாக்க உத்தரவிட வேண்டும். இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குளறுபடிகள் தொடர்பாக பஞ்சாப் மாநில அரசு விசாரிக்க முடியாது. இது ஒன்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அல்ல. இது உச்சகட்ட குளறுபடி. இதுபோல் மீண்டும் நடந்துவிடக் கூடாது என வாதிட்டார்.

என்.ஐ.ஏ. விசாரணை

என்.ஐ.ஏ. விசாரணை

இன்றைய விசாரணையின் போது மத்திய அரசின் சார்பாக் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அப்போது, அரிதினும் அரிதான இந்த வழக்கை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொண்டதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி சாலை மார்க்கமாக பயணம் மேற்கொள்ளும் போது மாநில டிஜிபியுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது போராட்டம் நடைபெறுவதாக முன்னெச்சரிக்கை தகவல் எதுவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தரப்படவில்லை. சாலை மறியல் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களுடன் பஞ்சாப் போலீசார் டீ குடித்து கொண்டிருந்தனர். மேம்பாலத்தின் மீது பிரதமர் மோடியின் கார் காத்திருக்கிறது என்கிற தகவலையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தை பஞ்சாப் மாநில அரசு விசாரிக்க முடியாது. தடை செய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி கோரும் அமைப்பு பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இது ஒரு சர்வதேச பயங்கரவாத செயலாகப் பார்க்கப்பட வேண்டும். இது தொடர்பாக மாநில அரசு கமிட்டி அமைக்க முடியாது. என்.ஐ.ஏ. அதிகாரிகள்தான் விசாரணை நடத்த வேண்டும் என்றும் துஷார் மேத்தா வாதிட்டார்.

பஞ்சாப் அரசின் கமிட்டி

பஞ்சாப் அரசின் கமிட்டி

பஞ்சாப் மாநில அட்வகேட் ஜெனரல் தமது வாதத்தின் போது, சம்பவம் நிகழ்ந்த அன்றே கமிட்டி ஒன்றை மாநில அரசு அமைத்துவிட்டது. அதாவது உச்சநீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே மாநில அரசு விசாரணைக்கான கமிட்டியை அமைத்தது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இந்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கையையும் நாங்கள் பதிவு செய்திருக்கிறோம் என்றார். அத்துடன் இது தொடர்பாக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி இருக்கிறோம்; எஸ்.பி.ஜிக்கு பஞ்சாப் போலீஸ் தரப்பில் உரிய அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பஞ்சாப்-ஹரியானா ஹைகோர்ட்டுக்கு உத்தரவு

பஞ்சாப்-ஹரியானா ஹைகோர்ட்டுக்கு உத்தரவு

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, கமிட்டியோ கமிஷனோ இத்தகைய குளறுபடிகள் இனி நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனை முதலில் சரி செய்ய வேண்டும். பாதுகாப்பு குளறுபடிகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் யார் அதை ஆட்சேபிக்க முடியும்? என்றார். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் பயண ஆவணங்களை பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளர் சேகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான பெஞ்ச், திங்கள்கிழமையன்றும் இந்த வழக்கு விசாரணை தொடரும் என உத்தரவிட்டது.

மத்திய அரசு குழுவில் யார் யார்?

மத்திய அரசு குழுவில் யார் யார்?

பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக விசாரிக்கும் மத்திய அரசின் குழுவில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளுடன் சண்டிகர் டிஜிபியும் இடம்பெறலாம் எனவும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார். முன்னதாக மாநில போலீசார் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குளறுபடி குறித்து விசாரிக்க முடியாது; என்.ஐ.ஏ.தான் விசாரிக்க வேண்டும் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மனுதாரர் மன்விந்தர் சிங் வலியுறுத்தி இருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+