Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படம் எடுத்து நின்ற பாம்பு.. பதறாமல் சாதுர்யமாக தப்பித்த பெண்.. டிரெண்டாகும் திக்.. திக்.. வீடியோ!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காட்டுப்பகுதியில் கட்டிலில் படுத்து கொண்டிருந்த பெண்ணின் அருகே செல்லும் நல்ல பாம்பு ஒன்று அந்த பெண்ணின் உடலில் ஏறி கொத்துவதற்காக படம் எடுக்கும் திக்.. திக்.. வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Recommended Video

    படம் எடுத்து நின்ற பாம்பு.. பதறாமல் சாதுர்யமாக தப்பித்த பெண்.. டிரெண்டாகும் திக்.. திக்.. வீடியோ!

    பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழி நம்ம ஊரில் சொல்வதுண்டு... அதற்கேற்ப நம்மில் பலருக்கும் பாம்பை கண்டால் ஒருவித அச்சம் தோன்றும்.

    ஒரு சிலர் பாம்பைக் கண்டால் மட்டும் அல்ல.. பாம்பு என கூச்சல் இட்டாலே.. பலர் நடுங்கி விடுவார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மக்களிடம் பாம்பு மீதான அச்சம் உள்ளது.

     பாம்பு.. பாம்பு..

    பாம்பு.. பாம்பு..

    ஆனால் பாம்பின் மீது மனிதர்களுக்கு எந்த அளவுக்கு பயம் இருக்கிறதோ.. அதை விட மனிதர்களை பார்த்து பாம்பும் அச்சப்படத்தான் செய்யும் என அறிவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நாம் ஏதும் செய்யாதது வரை, அல்லது அதனை இடைஞ்சல் செய்யாமல் இருந்தால் பாம்பு மனிதர்களை ஏதும் செய்யாது என்றும், நாம் பாம்பை அடிக்க நினைத்தாலோ அல்லது விரட்ட நினைத்தாலோ தான் பாம்பு அச்சமடைந்து அதற்கு பின்னர் தான் மனிதர்களை திரும்ப தாக்க தொடங்கும் என்று கூறுகிறார்கள்.

     உடலில் ஊர்ந்தபடி..

    உடலில் ஊர்ந்தபடி..

    தற்போது இதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதேசமயம் நம் உடல் மீது பாம்பு ஒன்று ஊர்ந்தபடி, கொத்துவதற்கு தயாராக வந்து நின்றால் எப்படியிருக்கும்.. நினைத்து பார்த்தாலே உடல் முழுவதும் புல்லரிக்கும் அல்லவா.. அந்த வகையிலான ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவை தான் இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த நந்தா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

     திகில் அடையச்செய்யும் வீடியோ

    திகில் அடையச்செய்யும் வீடியோ

    அடிக்கடி வன விலங்குகள் குறித்து பதிவு செய்து டிவிட்டரில் படு ஆக்டிவாக இருக்கும் சுஷாந்த் நந்தா பதிவுகள் எல்லாம் பெரும்பாலும் வனவிலங்ககளின் செல்ல சேட்டைகள் மற்றும் இரை தேடும் காட்சிகளாக இருக்கும். ஆனால், இந்த முறை சுஷாந்த நந்தா வெளியிட்ட பதிவு நெட்டிசன்களை திகில் அடைய வைத்துள்ளது. 30 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில், நடுத்தர வயது உடைய பெண் ஒருவர் ஒரு கட்டிலில் படுத்து இருக்கிறார். சுற்றிலும் மரங்கள், செடி கொடிகள், அருகில் ஒரு கன்றுக்குட்டி என பார்ப்பதற்கு கிராமப்புறம் என்பது தெளிவாக தெரிகிறது.

     வீடியோவை பார்க்கும் போதே உடல் நடுங்குகிறது

    வீடியோவை பார்க்கும் போதே உடல் நடுங்குகிறது

    கட்டிலில் படுத்து இருக்கும் பெண் மீது மெதுவாக ஊர்ந்து வரும் பாம்பு அவரது உடல் மேல் சிறிது வினாடிகள் படம் எடுத்தபடி நிற்கிறது. பாம்பு ஊர்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாலும் எந்த அசைவும் காட்டாத அந்தப் பெண் அப்படியே படுத்து இருக்கிறார். ஆனால் உதவி கேட்டு கத்துவது போல் தெரிகிறது. சில வினாடிகள் படம் எடுத்தபடி நின்ற பாம்பு சிறிது நேரத்தில் எந்த தீங்கும் விளைவிக்காமல் சென்று விட்டதாம். நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை பார்க்கும் போதே நமக்கு உடல் நடுங்குகிறது என்று பதிவிட்டுள்ளனர்.

     அமைதியாக சென்றுவிட வேண்டும்

    அமைதியாக சென்றுவிட வேண்டும்

    இன்னொரு நெட்டிசன் வெளியிட்டு இருக்கும் பதிவில், ''நிகழ்விடத்தில் நான் இருந்தால் அந்தப்பெண்ணை போலவே நானும் செய்து இருப்பேன்'' என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், ''பாம்பைக் கண்டு மனிதர்கள் அஞ்சி நடுங்குவதை விட பாம்பு மனிதர்களை கண்டு அதிகம் அச்சப்படும் என்று நான் கேள்வி பட்டு இருக்கிறேன். எனவே, நாம் அதை அடிக்க முற்படாதவரை பாம்பு ஒன்றும் செய்யாது. எனவே, மனிதர்கள் அமைதியாக சென்றுவிட வேண்டும் அல்லது அப்படியே நின்றுவிட வேண்டும்.. இந்தப்பெண் செய்தது புத்திசாலித்தனமான செய்கை'' என்று பதிவிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+