டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாட்ச்மேனிடம் மன்னிப்பு! ரிலையன்ஸ் இளவரசன் ஆகாஷ் அம்பானி! நீதா கொடுத்த பாக்கெட் மணி இவ்வளவு தானா?

Google Oneindia Tamil News

டெல்லி : ஆசியாவின் மிகவும் பெரிய பணக்கார குடும்பமான ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவன தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில் அவர் குறித்த தகவல்களை தேடுவதில் நெட்டிசன்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஆகாஷ் அம்பானி குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்..

நீ என்ன பெரிய அம்பானியா? அம்பானி மகன்னு நினைப்பா? என்ன சாலையோரம் போகிற போக்கில் யாரோ யாரையோ கேட்பதைப் பார்த்து இருக்கலாம். அந்த அளவுக்கு அம்பானி குடும்பம் இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் இருக்கின்ற குடும்பத்தினர் அனைவருக்கும் பரிச்சயம்.

 அந்த 4 பேர்.. எடப்பாடி கோட்டையில் இருந்து சீட்டுகளை உருவ திட்டம்.. இறங்கிய 3 புள்ளிகள்- நடக்குமா? அந்த 4 பேர்.. எடப்பாடி கோட்டையில் இருந்து சீட்டுகளை உருவ திட்டம்.. இறங்கிய 3 புள்ளிகள்- நடக்குமா?

சாதாரண குடும்பத்தில் பிறந்த அனில் திருபாய் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தை தொடங்கிய போது அது உலகம் முழுவதும் கிளை பரப்பும் ஓர் நிறுவனமாக இருக்கும் என அவர் கண்டிப்பாக நினைத்தே இருப்பார். ஏனென்றால் அவரது தொலைநோக்குப் பார்வை அப்படி.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் செல்போன் சேவையில் மட்டுமல்லாது பெட்ரோலியம், ரீடைல், டிஜிட்டல் என பல்வேறு தளங்களில் கால்பதித்து இன்று உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. அனில் திருபாய் அம்பானியின் மூத்த மகனான முகேஷ் அம்பானியின் காலத்திற்குப் பிறகு ரிலையன்ஸ் அசுர வளர்ச்சியைப் பெற்றது. இந்நிலையில் இந்தியாவின் ரிலையன்ஸ் குழும தலைவரான முகேஷ் அம்பானி அந்நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை பிரிவான 'ரிலையன்ஸ் ஜியோ' இயக்குநர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின் தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆகாஷ் அம்பானி பொறுப்பு

ஆகாஷ் அம்பானி பொறுப்பு

வெறும் 30 வயதில் உலகின் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்யத்தின் துணை பிரிவில் தலைவராவது அவ்வளவு எளிதல்ல வாரிசாகவே இருந்தாலும் தனது மகன் ஆகாஷ் மீதுள்ள நம்பிக்கையால் தான் இவ்வளவு பெரிய பொறுப்பை குறுகிய காலத்தில் ஒப்படைத்துள்ளார் முகேஷ் அம்பானி. தற்போது அல்ல பல ஆண்டுகளுக்கு முன்பே ரிலையன்ஸ் செல்போன் சேவையில் நுழைய திட்டமிட்ட போது, அதில் இருந்த டெக்னாலஜி குழுவில் இணைந்தவர் தான் ஆகாஷ். டெக்னாலஜியில் மிக வல்லவரான அவர் தனக்கான பாதையை அப்போதே தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

சுவாரசிய தகவல்கள்

சுவாரசிய தகவல்கள்

தொடர்ந்து அவரது உழைப்பில் நம்பிக்கை கொண்ட முகேஷ் அம்பானி அதன் பிறகு தான் தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் பொறுப்பு வரை மகனுக்கு வழங்கியுள்ளார். செல்போன் சேவை மட்டுமல்லாது ஜியோ டிவி உள்ளிட்ட அடுத்தடுத்த முயற்சிகளை புகுத்தியதில் ஆகாஷ் அம்பானியின் பங்கு குறிப்பிடத்தக்கது. தனது பள்ளிப் பருவ தோழியான ஷ்லொகா என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆகாஷ். அவரது மாமனார் இந்தியாவின் பிரபல வைர வியாபாரிகளில் ஒருவரான ரசல் மேத்தாவின் மகள். இவரது திருமணம் குறித்து சொல்லவே தேவையில்லை அந்த அளவுக்கு சுமார் மூன்று நாட்கள் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் இவரது திருமணம் நடைபெற்றது.

ஆர்வம் அதிகம்

ஆர்வம் அதிகம்

ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பதில் ஆகாஷ் அம்பானிக்கு ஆர்வம் அதிகம் என்பதும் அனைவருக்கே தெரியும். உலகில் பல விலையுயர்ந்த கார்கள் இவரது வீட்டு கேரேஜில் காத்துக் கொண்டிருக்கின்றன. கோடீஸ்வரக் குடும்பம் என்றாலும் தனது பிள்ளைகள் சிறு வயதிலிருந்தே சிக்கனத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அவரது தாய் நீதா அம்பானி. திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் அவர்கள் படித்தாலும் சொந்த பள்ளியாக இருந்தாலும் எவ்வித சலுகையும் பெறக்கூடாது என கண்டிப்புடன் இருந்தனர் அவரது பெற்றோரான முகேஷ் அம்பானியும், நீதா அம்பானியும்.

5 ரூபாய் பாக்கெட் மணி

5 ரூபாய் பாக்கெட் மணி

ஆகாஷ் அம்பானி அவரது சகோதரி இஷா அம்பானி, இளைய சகோதரர் ஆனந்த் அம்பானி ஆகிய மூவருமே ஒரே பள்ளியில் படித்தார்கள். பள்ளியின் கேண்டினில் கூட இவர்களுக்கு என எந்த சலுகையும் கிடையாது. பெற்றோர் கொடுத்து அனுப்பும் பணத்தில் தான் அவர்கள் ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிட வேண்டும்.
அதற்காக நீதா அம்பானி தனது மகன்களுக்கு வெறும் ஐந்து ரூபாயை மட்டுமே பாக்கெட் மணியாக கொடுத்து அனுப்புவாராம். அதனைப் பார்த்து சக மாணவர்கள் அம்பானி குடும்பமாக இருந்தாலும் இவ்வளவு குறைந்த தொகையையா கொண்டு வருவாய் என கிண்டல் செய்வார்களாம், எல்லோரும் என்னை கிண்டல் செய்கிறார்கள் என ஆகாஷ் அம்பானி சொன்னாலும் ரூ.5 தான் கடைசி வரை கிடைத்திருக்கிறது.

வாட்ச் மேனிடம் மன்னிப்பு

வாட்ச் மேனிடம் மன்னிப்பு

பணம் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது. கடுமையாக உழைத்தால் தான் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை என் குழந்தைகள் சிறுவயதில் இருந்தே உணர வேண்டும். பணத்தின் மதிப்பு குறித்து அவர்களுக்கு தெரிய வேண்டும் என தனது கணவர் சொல்வார். அதனால்தான் தான் அப்படி நடந்து கொண்டேன் என நீதா அம்பானியே கூறியிருக்கிறார். தன் வீட்டு வாட்ச்மேனிடம் கோபமாக பேசிய ஆகாஷ் அம்பானியை, அவரிடம் மன்னிப்பு கேட்க வைத்தார் முகேஷ் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது. இதனை நீதா அம்பானியே பலமுறை சொல்லியிருக்கிறார்.

English summary
Netizens are keen to find information about Mukesh Ambani's son Akash Ambani, who has taken over as chairman of Reliance Group's Geo, Asia's richest family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X