'பயங்கரவாதி போல சித்தரிப்பு' -ஸ்டேன் சுவாமி மரணம் இந்திய மனிதஉரிமை வரலாற்றில் பெரும் கறை..ஐநா சுளீர்
டெல்லி: ஸ்டேன் சுவாமி உயிரிழந்ததற்குக் கண்டனத்தைத் தெரிவித்துள்ள ஐநா நல்லிணக்க அதிகாரி மேரி லாலர் , ஸ்டேன் சுவாமி உயிரிழப்பு இந்திய மனித உரிமை வரலாற்றில் ஒரு கறையாக நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 84 வயதான சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியை என்ஐஏ அதிகாரிகள் எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்தனர்.
சுமார் 9 மாதங்களாக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இருப்பினும், ஒரு நாள்கூட என்ஐஏ அதிகாரிகள் அவரை விசாரணைக்கு அழைக்கவில்லை.

ஸ்டேன் சுவாமி
பர்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமிக்கு ஜாமீன் வழங்கச் சிறப்பு நீதிமன்றம் முதலில் மறுத்தது. சிறை மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமானது. அதன் பிறகு மும்பை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து அவருக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஐநா நல்லிணக்க அதிகாரி
இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஸ்டேன் சுவாமி கடந்த ஜூலை 5ஆம் தேதி உயிரிழந்தார். 84 வயதான ஸ்டேன் சுவாமி நடத்தப்பட்ட விதம் குறித்து பலரும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்டேன் சுவாமியின் மரணம் என்பது இந்திய மனித உரிமை வரலாற்றில் ஒரு கறையாக நீடிக்கும் என ஐநா நல்லிணக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதி போல் சித்தரிப்பு
இது குறித்து ஐநா நல்லிணக்க அதிகாரி மேரி லாலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "போதிய ஆதாரமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதையே உலக நாடுகளுக்கு ஸ்டேன் சுவாமியின் மரணம் உணர்த்துகிறது. மனித உரிமைகளைக் காக்கப் போராடிய ஒருவரைப் பயங்கரவாதிகள் போல் சித்தரித்தது, மன்னிக்கவே முடியாதது.

மனித உரிமை வரலாற்றில் ஒரு கறை
ஸ்டேன் சுவாமியின் மரணம் இந்திய மனித உரிமை வரலாற்றில் ஒரு கறையாக நீடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவரை போன்ற சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதற்கும், ஜாமீன் மறுக்கப்படுவதற்கும் எவ்வித முறையான காரணமும் இல்லை. கடந்த அக்டோபரில் ஸ்டேன் சுவாமி புனையப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு எவ்வித ஆதாரமும் இல்லாமல் பலமுறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

கோரிக்கை
பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த ஸ்டேன் சுவாமியின் உடல்நிலை மோசமடைந்ததால் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர். இருந்தாலும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. கடந்த 2020 நவம்பர் மாதம் ஐ.நா. வல்லுநர்கள் ஸ்டேன் சுவாமி சிறையில் அடைக்கப்பட்டது குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினோம்.

ஏன் ஜாமீன் இல்லை
மனித உரிமைகளைப் பாதுகாக்கத் தொடர்ந்து ஈடுபட்டு வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். நான் இப்போது மீண்டும் கேள்வியாகவே கேட்கிறேன் பல்வேறு கோரிக்கைகளுக்குப் பின்னரும் அவர் ஏன் விடுதலை செய்யப்படவில்லை? அவர் ஏன் காவலில் உயிரிழக்க வேண்டும்?" என்று அவர் தனது அறிக்கையில் காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். முன்னதாக ஸ்டேன் சுவாமி உயிரிழப்பிற்குப் பல சர்வதேச மனித உரிமைகள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சட்டத்தை மீறவில்லை
அப்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "என்ஐஏ அதிகாரிகளால் ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டார். அவர் மீது பதியப்பட்ட வழக்குகளின் தன்மை காரணமாக அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. அரசு அவரை சட்டத்தின்படியே நடத்தியது, அவரது உரிமைகள் எந்த இடத்திலும் மறுக்கப்படவில்லை. இந்திய அதிகாரிகள் எந்த இடத்திலும் சட்டத்தை மீறிச் செயல்படவில்லை " என விளக்கமளித்திருந்தது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications