கைக்குட்டையை நழுவவிட்ட பிரதீபா பாட்டில்.. டக்கென குனிந்து எடுத்து தந்த பிரதமர் மோடி.. நெகிழ்ச்சி
கைக்குட்டை கீழே விழுந்ததை எடுத்து, பிரதீபா பாட்டிலிடம் தந்தார் பிரதமர் மோடி
டெல்லி: பிரதீபா பாட்டிலின் கைக்குட்டை தவறுதலாக கீழே விழுந்துவிட்ட நிலையில், அதை சற்றும் தாமதிக்காமல் பிரதமர் மோடி எடுத்து பிரதீபாவிடம் தந்த நிகழ்வு வைரலாகி வருகிறது.
நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது... இதில் பதிவான ஓட்டுக்கள், 21-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட, ஒடிசா மாநிலத்தின் பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்மு அபார வெற்றி பெற்றார்.

வெள்ளை நிறம்
இதையடுத்து நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.. வெள்ளை நிறத்தில் சிவப்பு மற்றும் பச்சை நிற பார்டர் போட்ட, பழங்குடியினர் அணியும் பாரம்பரிய புடவை அணிந்திருந்தார்.... முன்னதாக, டெல்லியில் உள்ள மஹாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று, திளெபதி அஞ்சலி செலுத்தினார்.. பிறகு, ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற அவருக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது...

முதல் உரை
பார்லிமெண்ட் வாயிலில், திரௌபதி முர்முவுக்கு பாதுகாப்பு படையினர் சல்யூட் அடித்து வரவேற்றனர்.. சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைக்க, நாட்டின் 15வது புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார்... தான் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்த ராம்நாத் கோவிந்த், அந்த இருக்கையில் திரௌபதி முர்முவை அமரச்செய்து, தன் வாழ்த்துக்களை கூறினார்.. புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, தன்னுடைய முதல் உரையையும் திரௌபதி அங்கு நிகழ்த்தினார்..
Recommended Video

அதிர்ஷ்டம்
அப்போது திரௌபதி பேசியபோது, சுதந்திரம் அடைந்து, 75 வருடங்கள் ஆகிவிட்டதை அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கும் மிக முக்கியமான காலகட்டத்தில், ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளேன்.... நான் தான் சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் ஜனாதிபதியும் கூட... அந்த வகையில், நான் மிகுந்த அதிர்ஷ்டம் மிகுந்தவள் என்றே கருதுகிறேன். இதன் வாயிலாக, சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகள் கண்ட கனவை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார்.

மூப்பு காரணமாக முன்வரிசை
இந்த பதவியேற்பு நிகழ்வில், துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்... முன்னாள் குடியரசுத் தலைவரான பிரதீபா பாட்டிலுக்கு, வயது மூப்பு காரணமாக பதவியேற்பு விழாவில், முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது விழாவுக்கு வந்த பிரதமர் மோடி, பிரதீபா பாட்டீலுக்கு வணக்கம் தெரிவித்தார்.. பிறகு அவருக்கு பக்கத்திலேயே உட்கார்ந்து அவருடன் உரையாடிக்கொண்டிருந்தார்...

கர்சீப்
இறுதியாக, விழா மேடையில் அனைவரும் எழுந்து நிற்கும்போது, பிரதீபா பாட்டிலும் எழுந்து நின்று, தன் இருக்கையில் உட்கார்ந்தார்.. அப்போது அவரது வெள்ளை நிறக்கைக்குட்டை தவறுதலாக கீழே விழுந்துவிட்டது.. இதை கவனித்துவிட்ட பிரதமர் மோடி, உடனே கீழே குனிந்து, அந்த கைக்குட்டையை குனிந்து எடுத்து, பிரதீபாவிடம் தந்தார்.. இதை அங்கிருந்தோர் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தனர்.. இந்த போட்டோவும், வீடியோவும்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications