டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நுரையீரல் பாதிப்பு.. சிகிச்சை பலனின்றி உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதர் காலமானார்

Google Oneindia Tamil News

டெல்லி: நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த மோகன் எம் சாந்தனகவுதருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவர் குருக்ரமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Supreme Court Judge Justice Mohan M Shantanagoudar Dies At 62

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல் நிலை, நேற்று இரவு வரை நலமாகவே இருந்தது. நள்ளிரவுக்குப் பின் அவரது உடல் நிலை திடீரென மோசமாகத் தொடங்கியது. அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாகப் போராடினர்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதர் கொரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

 அதி உச்சத்தில் கொரோனா பரவல்: டெல்லியில் மேலும் 1 வாரத்துக்கு லாக்டவுன் நீட்டிப்பு அதி உச்சத்தில் கொரோனா பரவல்: டெல்லியில் மேலும் 1 வாரத்துக்கு லாக்டவுன் நீட்டிப்பு

நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதர் 1958ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்தவர், முதலில் வழக்கறிஞராக இருந்த இவர், 2003ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து 2016இல் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற அவர், 2017இல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியானார்.

English summary
Supreme Court Judge Justice Mohan M Shantanagoudar Dies At 62
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X