சி.ஏ.ஏ.-க்கு எதிராக 200 பொதுநலன் வழக்குகள்: செப்.19-க்கு விசாரணையை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: நாட்டையே அதிரவைத்த மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம்- சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தொடரப்பட்ட 200-க்கும் மேற்பட்ட பொதுநலன் வழக்குகள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணை நடைபெற உள்ளது.
2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து மத ரீதியிலான ஒடுக்குமுறைக்குள்ளாக்கி தப்பி வந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமணர்கள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க புதிய சட்டம் வகை செய்கிறது. அத்துடன் மேற்குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்தால் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டது.

மேலும் 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாகவோ பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் மட்டுமே இந்திய குடியுரிமையை பெற விண்ணப்பிக்க தகுதி பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாமில்தான் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம் முதலில் மையம் கொண்டது. பின்னர் வடகிழக்கு மாநிலங்கள் முழுமைக்கும் பரவியது. இதனைத் தொடர்ந்தே நாட்டின் பல மாநிலங்களிலும் சி.ஏ.ஏ.எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. வடகிழக்கு மாநிலங்களில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக லட்சக்கணக்கானோர் குடிபெயர்ந்துள்ளனர். சி.ஏ.ஏ. மூலமாக இவர்கள் அனைவருமே இந்திய குடியுரிமையை பெற்றுவிடுவர். இதனால் வடகிழக்கு மாநிலங்களின் பூர்வகுடிகளாக ஆதி பழங்குடி இனத்தவர் மிகவும் சிறுபான்மையினராகிவிடுவர் என்பதாலேயே வடகிழக்கு மாநிலம் சி.ஏ.ஏ.வை கடுமையாக எதிர்க்கிறது. சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் உக்கிரமடைந்த காலத்தில் கொரோனா பரவல் தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் சி.ஏ.ஏ. போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
மேலும் சி.ஏ.ஏவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது. இன்றைய விசாரணைக்குப் பின்னர் செப்டம்பர் 19-ந் தேதிக்கு இந்த வழக்கு விசாரண ஒத்திவைக்கப்பட்டது.
-
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!











Click it and Unblock the Notifications