டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Lok Sabha Exit Poll Results 2019: மீண்டும் பாஜக ஆட்சி.. தமிழகத்தில் திமுகவுக்கு வெற்றி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit polls 2019 | மீண்டும் பாஜக! ஆனால் தமிழகத்தில் திமுக

    டெல்லி: லோக்சபா தேர்தலை நிறைவு பெற்றதை அடுத்த இன்று மாலை 6.30க்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளிவர உள்ளது.

    மிகப்பெரிய தேர்தல் திருவிழா தற்போது இந்தியாவில் நடந்து முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப் பதிவும் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமையும் என்பது தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளிவர தொடங்கியுள்ளன.

    Newest First Oldest First
    7:55 PM, 19 May

    தமிழ்நாடு

    புதிய தலைமுறை டிவி சேனலின் கருத்து கணிப்புப்படி தமிழகத்தில் திமுக 31 இடங்களில் வெல்லும்
    7:47 PM, 19 May

    மேற்கு வங்கம்

    ரிபப்ளிக் ஜன்கிபாத் கருத்து கணிப்பில் மேற்கு வங்கத்தில் பாஜக 18 முதல் 26 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
    7:45 PM, 19 May

    பீகார்

    என்டிடிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் பீகாரில் பாஜக அணி 31; காங்கிரஸ்- ஆர்ஜேடி அணி 9 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    7:45 PM, 19 May

    மகாராஷ்டிரா

    இந்தியா டுடே- ஆக்சிஸ் எக்ஸிட் போல் முடிவுகளானது மகாராஷ்டிராவில் பாஜக அமோக வெற்றி பெறும் என்கிறது.
    7:35 PM, 19 May

    ஆந்திரா

    இந்தியா டுடே கருத்து கணிப்பின்படி கேரளாவில் இடதுசாரிகள் பலத்த அடியை வாங்க உள்ளனர். கர்நாடகாவில் காங்கிரஸுக்கு படுதோல்வி கிடைக்குமாம்.
    7:35 PM, 19 May

    இந்தியா டுடே கருத்து கணிப்பின்படி கேரளாவில் இடதுசாரிகளுக்கும் கர்நாடகாவில் காங்கிரஸுக்கும் பலத்த அடி விழுமாம்

    ஆந்திரா: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்- 18 முதல் 20; தெலுங்குதேசம் 4-6; கர்நாடகா பாஜக- 21 முதல் 25; காங்கிரஸ் 3-6; இதர-1; கேரளா: காங்கிரஸ் அணி- 15 முதல் 16; இடதுமுன்னணி 3-5; பாஜக-1
    7:30 PM, 19 May

    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 13 முதல் 14 இடங்களைக் கைப்பற்றும்- நியூஸ் 18 கருத்து கணிப்பு

    ஆந்திரா: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 13 முதல் 14 இடங்களையும் தெலுங்குதேசம் கட்சி 10 முதல் 12 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    7:29 PM, 19 May

    தெலுங்கானாவில் டிஆர்எஸ் 12 முதல் 14 இடங்களைக் கைப்பற்றும்: நியூஸ் 18 கருத்து கணிப்பு

    தெலுங்கானா: தெலுங்கானாவில் ஆளும் டிஆர்.எஸ் கட்சி 12 முதல் 14 இடங்களைக் கைப்பற்றும் என்கிறது நியூஸ் 18 கருத்து கணிப்பு
    7:26 PM, 19 May

    நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பின்படி தமிழகத்தில் திமுக 34-38 இடங்களைக் கைப்பற்றும்

    தொகுதிகளும் வெல்லும் கட்சியும்: அரக்கோணம் - திமுக; ஆரணி- அதிமுக; மத்திய சென்னை- திமுக- வடசென்னை- திமுக; தென் சென்னை - திமுக; சிதம்பரம்- விசிக; கோவை- அமமுக; கடலூர்- திமுக; தருமபுரி- பாமக; திண்டுக்கல்- திமுக; ஈரோடு- மதிமுக; கள்ளக்குறிச்சி- தேமுதிக; காஞ்சிபுரம் திமுக; கன்னியாகுமரி- காங்கிரஸ்; கரூர்- அதிமுக; கிருஷ்ணகிரி- காங்கிரஸ்; மதுரை- அமமுக; மயிலாடுதுறை- திமுக; நாகை- அதிமுக; நாமக்கல்- அதிமுக; நீலகிரி- திமுக; பெரம்பலூர்- அதிமுக; பொள்ளாச்சி- அமமுக; ராமநாதபுரம்- பாஜக; சேலம்- திமுக; சிவகங்கை- காங்கிரஸ்; ஶ்ரீபெரும்புதூர்- திமுக; தென்காசி- திமுக; தஞ்சாவூர்- திமுக; தேனி- அதிமுக; திருவள்ளூர்- அதிமுக- தூத்துக்குடி- திமுக; திருச்சி- அமமுக; நெல்லை- அதிமுக- திருவண்ணாமலை- திமுக; விழுப்புரம்- விசிக; விருதுநகர்- அமமுக
    7:16 PM, 19 May

    என்.டி.டிவி கருத்து கணிப்பின் படி தமிழகத்தில் திமுக 26 இடங்களில் வெல்லுமாம்

    தமிழ்நாடு: என்டிடிவி கருத்து கணிப்பின்படி தமிழகத்தில் திமுக 26; அதிமுக அணி 11 இடங்களில் வெல்லும். இதர கட்சிகள் -1
    7:12 PM, 19 May

    நியூஸ் நேசன் கருத்து கணிப்பின்படி பாஜக 282 முதல் 290 இடங்களைக் கைப்பற்றும்

    டெல்லி: நியூஸ் நேசன் சேனல் கருத்து கணிப்பின்படி பாஜக 282-290; காங்கிரஸ் அணி 118-126 இடங்களைக் கைப்பற்றுமாம்.
    7:06 PM, 19 May

    டைம்ஸ் நவ் கருத்து கணிப்பின் படி உத்தரப்பிரதேசத்தில் பாஜக 58 இடங்களைக் கைப்பற்றும்

    உத்தரப்பிரதேசம்: டைம்ஸ் நவ் கருத்து கணிப்பின்படி உத்தரப்பிரதேசத்தில் பாஜக 58; பகுஜன் சமாஜ் -சமாஜ்வாதி 20 இடங்களைக் கைப்பற்றுமாம்.
    7:03 PM, 19 May

    டைம்ஸ் நவ் கருத்து கணிப்பின் படி தமிழகத்தில் திமுக 29 இடங்களைக் கைப்பற்றும்

    தமிழ்நாடு: டைம்ஸ் நவ் கருத்து கணிப்பின் படி தமிழகத்தில் திமுக 29; அதிமுக 9 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    6:58 PM, 19 May

    அதிமுக கூட்டணி 0-4; திமுக அணி- 34-38

    தமிழ்நாடு: இந்தியா டுடே கருத்து கணிப்பில் திமுக அணி 34-38 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    6:56 PM, 19 May

    ஜி நியூஸ் சேனலின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்குமாம்

    பாஜக அணி 305; காங்கிரஸ் அணி 124; பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி 26 டெல்லி: ஜி நியூஸ் சேனலின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பின்படி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    6:51 PM, 19 May

    நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்: திமுக கூட்டணிக்கு 34 சீட் கிடைக்கும்!

    சென்னை: நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் திமுக அலை வீசுவதாக கணிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 34 முதல் அதிகபட்சம் 38 தொகுதிகளையும் திமுக வெல்லும் என்று அது கூறுகிறது. அதிமுகவுக்கு அதிகபட்சம் 4 வரை கிடைக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    6:48 PM, 19 May

    தமிழக நிலவரம்; அதிமுக 14 முதல் 16; திமுக 22-24 தொகுதிகள் கைப்பற்றும்

    தமிழகம்: நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் தமிழகத்தில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    6:45 PM, 19 May

    நியூஸ் 18 தமிழ்நாடு டிவியின் கருத்து கணிப்பிலும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்

    பாஜக- 292 முதல் 312; காங்கிரஸ்- 62 முதல் 72'; இதர கட்சிகள் 102 முதல் 112 டெல்லி: நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பிலும் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    6:43 PM, 19 May

    சி வோட்டர் கருத்து கணிப்பிலும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்

    பாஜக அணி- 287; காங்கிரஸ் 128; பகுஜன்-சமாஜ்வாதி -40; இதர கட்சிகள் 87 டெல்லி; சி வோட்டரின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது.
    6:37 PM, 19 May

    டைம்ஸ்நவ்- விஎம்ஆர் எக்ஸிட் போல்: மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்!

    டெல்லி: டைம்ஸ்நவ்- விஎம்ஆர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக அணி- 306, காங்கிரஸ் அணி- 132, இதர கட்சிகள் 132, வாக்கு சதவீதம்: பாஜக அணி 41.1%, காங்கிரஸ் அணி 31.7%, இதர கட்சிகள்- 27.2%
    6:27 PM, 19 May

    டெல்லி

    லோக்சபா தேர்தலில் வெல்லப் போவது யார் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளன.

    The Exit Poll results for Loksabha Elections 2019 - LIVE UPDATES
    English summary
    Lok Sabha Exit Polls 2019 Live News Updates in Tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X