ராஜ்யசபாவில் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு: மாநில உரிமைகளை ஆளுநர் மதிக்கவில்லை! திருச்சி சிவா பேட்டி
ஆளுநர் ஆர்.என். ரவி மீது தங்களுக்கு எந்த வித தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்று திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார்
டெல்லி: . சட்டமன்றத்தின் நடவடிக்கைகளை, மாநிலத்தின் உரிமைகளை ஆளுநர் ஆர்.என். ரவி மதிக்காமல் செயல்படுவதாக திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது எங்களின் கடமை என்றும் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே அனைத்து கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. இது தொடர்பாகக் கடந்த அதிமுக ஆட்சியிலேயே மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளிக்காததால் அது நிறைவேறவில்லை.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை கண்டித்து மாநிலங்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து ராஜ்யசபாவில் திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கண்டன முழக்கம் எழுப்பினர்.

திருச்சி சிவா பேச்சு
ஒரு மாநில சட்டமன்றம் அனுப்ப கூடிய மசோதாவை ஒரு ஆளுநர் எப்படி திருப்பி அனுப்ப முடியும்? என திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறினார். நீட் விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றம் அனுப்பிய மசோதாவை திருப்பி அனுப்பி ஆளுநர் அவமானப்படுத்துகிறார். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் நாளை இதே நிலை ஏற்படலாம் என்றும் திருச்சி சிவா கூறினார்.

வெளிநடப்பு
ஆளுநரின் செயல் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். திமுக எம்.பிக்களின் கோரிக்கையை ஏற்க ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு ஏற்க மறுத்து விட்டார். கேள்வி நேரத்தில் பேசமுடியாது; குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசுங்கள் என வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். ஆளுநரின் செயல் குறித்து விவாதம் நடத்த வெங்கய்ய நாயுடு அனுமதிக்காததால் திமுக எம்.பி.க்கள் ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்தது ஏன்
வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, இன்றைய தினம் ராஜ்யசபாவில் இருந்து திமு,க காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்திருப்பதாக கூறினார். இப்போது பிரச்சினை வேறு வடிவம் உள்ளது. ஆளுநர் இதை கையிலேயே வைத்திருக்கிறார். தமிழக சட்டசபையின் உணர்வுகளை ஏன் மதிக்கவில்லை என்று நேற்று ஆர்.எஸ். பாரதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசும் போது பேசியதாக திருச்சி சிவா தெரிவித்தார்.

எங்கே பேசுவது
நேற்று மாலை ஆளுநர் ஆர்.என். ரவி நீட் விலக்கு மசோதவை திருப்பி அனுப்பி விட்டார். இதனையடுத்து நாங்கள் இந்த முறையை கையில் எடுக்க வேண்டியுள்ளது இது ஜனநாயகத்தில் அனுமதி அளிக்கப்பட்ட முறைதான் என்றும் திருச்சி சிவா கூறினார். அரசியல் சட்டத்தை திருத்தம் செய்கின்ற மன்றத்தில் பேசாமல் வேறு எங்கே பேசுவது என்றும் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். எதிர்கட்சி எம்.பிக்களின் செயல்பாடுகளுக்கு அதிமுக எம்.பிக்கள் ஆதரவு கொடுத்தார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த திருச்சி சிவா, ராஜ்யசபாவில் அதிமுக உறுப்பினர்கள் இருந்ததாகவும் தெரியவில்லை எழுந்ததாகவும் தெரியவில்லை என்று கூறினார்.

காழ்ப்புணர்ச்சி இல்லை
அனைத்து கட்சிக்கூட்டத்தை பாஜக புறக்கணிக்கிறது. ஆளுநர் மீது தனிப்பட்ட முறையில் வன்மத்தை கக்குவதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். வன்மம் கக்குவதற்கு எங்களுக்கு தனிப்பட்ட அவர் மீது எந்த வித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்று கூறிய திருச்சி சிவா, பல மாநிலங்களில் ஆளுநர் அரசுக்கு முற்றிலும் மாறுபட்ட முறையில் செயல்படுகிறார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநர் முற்றிலும் அரசுக்கு விரோதமாக செயல்படுகிறார். கேரளாவிலும் அவ்வாறுதான் நடைபெறுகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.

மதிக்காத ஆளுநர்
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மத்திய அரசின் பிரதிநிதிகளாக மாறி விட்டனர். குடியரசுத்தலைவரின் பிரதிநிதி என்பதாக இல்லை. தமிழக அரசின் உரிமைகளை, உணர்வுகளை செயல்களை தடுக்கின்ற வகையில் செயல்படுகிறார். அவர் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை. நட்புணர்வுவோடு இருமுறை சந்தித்து எங்களின் முதல்வர் பேசியிருக்கிறார். சட்டமன்றத்தின் நடவடிக்கைகளை, மாநிலத்தின் உரிமைகளை அவர் மதிக்காமல் செயல்படுகிறார். நாங்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எங்களின் கடமை என்றும் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications