டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூடுது குறையுது ரிப்பீட்டு! அதள பாதாளத்துக்கு சென்ற கொரோனா! ஆனாலும் அச்சமூட்டும் ஆக்டிவ் கேஸ்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் மாறி மாறி பதிவாகி வரும் நிலையில் இன்றும் பாதிப்பு வெகுவாக சரிந்துள்ளது. நேற்று 17 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று 11 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, ஆக்ட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது.

Recommended Video

    இந்த கொரோனா வீரியம் அதிகம்.. முகக்கவசம் கட்டாயம் - மா சுப்பிரமணியன்

    இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    4 ஆண்டுகளுக்கு முந்தைய ட்வீட்டால் ஆல்ட் நியூஸ் முகமது ஜுபைர் கைது- போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி! 4 ஆண்டுகளுக்கு முந்தைய ட்வீட்டால் ஆல்ட் நியூஸ் முகமது ஜுபைர் கைது- போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி!

    இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கையாளப்படாததாலேயே கொரோனா பாதிப்பு மாறி மாறி பதிவாகி வருகிறது.

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    இந்தியாவைப் பொறுத்தவரை அதிகமாக மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மேலும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிப்பு மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில், நேற்று 17 ஆயிரத்தைத் தாண்டி பதிவானது. இந்நிலையில்தான் இன்று பாதிப்பு திடீரென சரிவை சந்தித்துள்ளது.

    மீண்டும் உயர்வு

    மீண்டும் உயர்வு

    நேற்று முன்தினம் சுமார் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் நேற்று 17 ஆயிரத்துக்கு மேலே அதாவது, 17 ஆயிரத்து 73 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று 11 ஆயிரத்து 793பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 18 ஆயிரத்து 839 ஆக உயர்ந்துள்ளது.

    பலி எண்ணிக்கை

    பலி எண்ணிக்கை

    கொரோனா காரணமாக 27 பேர் பலியான நிலையில் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 47 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 9 ஆயிரத்து 486 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 97 ஆயிரத்து 92 ஆக அதிகரித்துள்ளது.

    தடுப்பூசி அளவு

    தடுப்பூசி அளவு

    மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 96 ஆயிரத்து 700 பேர் கிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை 196 கோடியோ 20 லட்சத்து 74 ஆயிரத்து 155 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 101 கோடியே 60 லட்சத்து 86 ஆயிரத்து 301 முதல் டோஸ் தடுப்பூசியும், 91 கோடியே 26 லட்சத்து 53 ஆயிரத்து 785 இரண்டாவது டோஸ் தடுப்பூசியும், 4 கோடியே 33 லட்சத்து 34 ஆயிரத்து 069 டோஸ் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    English summary
    In India, the incidence of corona is changing day by day and the incidence is still declining. The number of active cases has been confirmed at 11,000 today and the number of active cases is approaching one lakh, up from 17,000 yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X