டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராணுவ தேர்வில் சாதி அடிப்படையில் பாகுபாடா? உண்மை என்ன? - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி; ஆயுதப்படையில் ஆட்சேர்ப்பு விவகாரத்தில் சாதி அடிப்படையில் எந்த பாகுபாடுகளும் காட்டப்படுவதில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

Recommended Video

    இன்றைய அரசியல் நிகழ்வுகள் | Politics Today with Jailany

    அக்னிபாத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் பாதுகாப்புத்துறையில் ஆட்சேர்ப்பு விவகாரம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் மேலெழுந்தன. பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையிலும் இறங்கினர்.

    இந்நிலையில், பாதுகாப்புத்துறையில் ஆட்சேர்ப்பு விவகாரத்தில் பாகுபாடு காட்டப்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து எழும் விமர்சனங்களில் உண்மை இல்லையென்று மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தல் விளக்கமளித்துள்ளார்.

    6 இடங்கள்.. 6 வியூகங்கள்.. ஒரே இரவில் அமெரிக்காவை திக்கி திணற வைத்த சீனா.. டிராகனின் மெகா பதிலடி! 6 இடங்கள்.. 6 வியூகங்கள்.. ஒரே இரவில் அமெரிக்காவை திக்கி திணற வைத்த சீனா.. டிராகனின் மெகா பதிலடி!

     அமளி

    அமளி

    கடந்த 18ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடும் அமளிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தது, அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது என ஏறத்தாழ அனைத்து நாட்களும் இரு அவைகளும் அமளியை எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில், பாதுகாப்புத்துறையில் ஆட்சேர்ப்பு விவகாரத்தில் பாகுபாடு காட்டப்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து வந்த விமர்சனங்களுக்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இன்று மாநிலங்களவையில் விளக்கமளித்தார். "சாதியின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு விவகாரத்தில் எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை என்று" அவர் தனது விளக்கத்தில் கூறியுள்ளார்.

    அக்னிபாத்

    அக்னிபாத்

    4 ஆண்டுகள் ராணுவத்தில் தற்காலிகமாக பணியாற்ற வாய்ப்பளிக்கும் அக்னிபாத் எனப்படும் திட்டம் சமீபத்தில் மத்திய அரசால் முன்மொழியப்பட்டது. இது பெரும் சர்ச்சையை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டதை எதிர்த்த போராட்டங்கள் வன்முறையாக வெடித்தன. இதனையடுத்து இந்த திட்டத்திற்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்தது. சூழல் இவ்வாறு இருக்க பாதுகாப்பு பணிகளில் சாதி மற்றும் மத்தின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக சில புகார்கள் அவ்வப்போது மேலெழுந்தன. இந்த சர்ச்சை புகார்கள் குறித்து உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இன்று மாநிலங்களவையில் விளக்கமளித்தார்.

    விளக்கம்

    விளக்கம்

    விளக்கத்தில் அமைச்சர் கூறியதாவது, "ஆயுதப்படையில் ஆட்கள் தேர்வு என்பது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியானதுதான். சிலர் சிஏபிடிஃப் எனப்படும் மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் போன்ற படைப்பிரிவில் சாதி அடிப்படையில் ஆட்கள் சேர்க்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அவர்கள் குறிப்பிடுவது போல ஆட்கள் சேர்க்கப்படுவதில்லை" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "SC, ST, OBC மற்றும் EWS ஆகிய பிரிவினருக்கு அரசு வழங்கியுள்ள இடஒதுக்கீடு இந்த ஆட்சேர்ப்பு பணியில் பின்பற்றப்படுகிறது. இது தவிர எந்தவித சாதிய பாகுபாடுகளும் இதில் காட்டப்படுவதில்லை. SC பிரிவினருக்கு ஒதுக்கப்படும் பணியிடங்கள் அவர்களை கொண்டுதான் நிரப்பப்படுகின்றன. ஒருவேளை இந்த பணியிடங்கள் மீதி இருப்பின் அடுத்த சுற்று ஆட்சேர்ப்பில் இவை அந்த குறிப்பிட்ட பிரிவினர்களுக்காக சேர்க்கப்படுகின்றன" என அமைச்சர் தனது விளக்கத்தில் கூறினார். இதனைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு அம்சம் குறித்தும் விளக்கமளித்தார்.

     பெண்கள்

    பெண்கள்

    அவர் மேலும் பேசியதாவது, "வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பு நிலைமை 2014ம் ஆண்டிலிருந்து கணிசமாக மேம்பட்டுள்ளது. 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021 ஆம் ஆண்டில் கிளர்ச்சி சம்பவங்களில் 74%, பொதுமக்கள் இறப்புகளில் 89% மற்றும் பாதுகாப்புப் படைகளின் உயிரிழப்புகளில் 60% குறைந்துள்ளது. அதேபோல உள்நாட்டு பாதுகாப்பு நிலவரத்தை பொறுத்த அளவில், கடந்த சில ஆண்டுகளாக என்ஐஏ மூலம் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு, என்ஐஏவின் திறன் மேம்படுத்தப்பட்டதே முக்கியக் காரணம். நமது பாதுகாப்புப் படையில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது."

    English summary
    The selection process in Armed Forces is open to all citizens without any discrimination on the basis of caste. The recruitment in Central Armed Police Forces (CAPFs) & Assam Rifles is not made on the basis of caste says MoS Home Nityanand Rai to Rajya Sabha
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X