Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாட்டை உலுக்கும் கொரோனா 3வது அலை.. எப்போது முடிவுக்கு வரும் தெரியுமா? நிபுணர் கூறுவது இதுதான்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை இந்தியாவில் குறையும் அல்லது கிட்டத்தட்ட முடிந்து விடலாம் என கான்பூர் ஐஐடி நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வகை வைரஸ் பரவல் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே ஐரோப்பா ஆஸ்திரேலியா இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவிய இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது.

இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கியுள்ளது. நாளொன்ருக்கு லட்சக்கணக்கில் பாதிப்புகள் பதிவாகி வருகின்றது. தமிழகத்திலும் இந்த பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மும்பை, சென்னை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளது.

கொரோனா 3வது அலை

கொரோனா 3வது அலை


இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா மூன்றாவது அலை மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் குறைவாகவே இருக்கும் என கான்பூர் ஐஐடியின் பேராசியர் மணீந்தர அகர்வால் கூறியுள்ளார். கான்பூரில் உள்ள ஐஐடியின் கணிதம் மற்றும் கணினி அறிவியல் பேராசிரியரான மனீந்திர அகர்வால், மும்பை மற்றும் டெல்லியில் ஜனவரி நடுப்பகுதியில் மூன்றாவது அலை உச்சத்தை எட்டும் என்றும், இந்தியாவில் ஒரு நாளைக்கு நான்கு முதல் எட்டு லட்சம் கொரோனா பாதிப்புகள் இருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

பாதிப்பு உயர்ந்து குறையும்

பாதிப்பு உயர்ந்து குறையும்

மும்பையை பொறுத்தவரை மூன்றாவது அறை இந்த மாதத்தின் நடுப்பகுதியில் உச்சத்தை எட்டும் எனவும் அந்த நிலை வெகு தொலைவில் இல்லை எனக் கூறியுள்ள மகேந்திரசிங் டில்லியிலும் இதேபோல்தான் பாதிப்பு இருக்கும் எனக் கூறினார் மேலும் தற்போது இந்தியா முழுமைக்குமான போதுமே தகவல்கள் கிடைக்காததால் இது முதல்கட்ட தகவல்கள் மட்டுமே எனவும் அடுத்த மாத தொடக்கத்தில் மற்ற இடங்களில் உச்சத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் கூறிவிடுகிறார் மேலும் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை வேகமாக மாறி வருவதால் மூன்றாவது அறை எப்போது உச்சத்தை தொடும் என சரியாக மதிப்பிட முடியவில்லை எனவும் தற்போதைய கணக்கீட்டின் படி ஒரு நாளைக்கு 4 முதல் 8 லட்சம் பேர் வரை பரவலான பாதிப்புகள் ஏற்படும் என கூறினார்.

ஒரு மாத அவகாசம்

ஒரு மாத அவகாசம்

டெல்லி மற்றும் மும்பையில் பாதிப்புகள் எவ்வளவு வேகமாக உயர்ந்து விட்டதோ அதே அளவு வேகமாக பாதிப்புகள் குறைய வாய்ப்புள்ளது என கூறியுள்ள அகர்வால், இந்தியா முழுவதும் இப்போதுதான் பாதிப்புகள் உயர ஆரம்பித்து இருக்கிறது எனவும் அது உச்சம் பெற்று கீழே வர இன்னும் ஒரு மாத காலமாக வேண்டும் என்றார் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் தொற்றுநோய் மூன்றாவது அலை இந்தியாவில் குறைவாகவே இருக்கலாம் எனவும் மனித அகர்வால் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Omicron 5 New Symptoms | AIIMS Delhi | Oneindia Tamil
    முழு ஊரடங்குக்கு வாய்ப்பு?

    முழு ஊரடங்குக்கு வாய்ப்பு?

    கொரோனா முதல் அலையின் போது முழு ஊரடங்கு பரவல் விகிதத்தை இரண்டு மடங்கு குறைந்த நிலையில் இரண்டாவது அலையின் போது பல்வேறு மாநிலங்கள் வெவ்வேறு உத்திகளை கடைபிடித்தன. பகுதி நேர ஊரடங்கு அல்லது இரவு நேர ஊரடங்கு ஆகியவை மூலம் தொற்று பரவலை குறைந்ததை பார்க்க முடிந்தது. இது ஒரு உதவிகரமான முறைதான் என கூறிய அவர் கடுமையான முழு ஊரடங்கு எப்பொழுதும் தொற்றுநோயின் பரவலை குறைக்க அதிகமாகவும் எனும் ஆனால் அது பலரின் வாழ்வாதாரத்தை முழுமையாக இழக்கும் நிலைக்கு தள்ளும் என்பதால் அதை ஒரு எதிர்மறையான பார்வையோடு அணுக வேண்டும் எனவும், கொரோனா மரணங்களைப் பற்றி நாம் பேசும் அதே நேரத்தில் சில சமயங்களில் வாழ்வாதார இழப்பால் ஏற்படும் மரணங்கள் பற்றியும் பேச வேண்டும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+