திடீரென குலுங்கிய டெல்லி.. அலறிய மக்கள்! ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் நிலடுக்கம் எதிரொலியால் அதிர்வு!
டெல்லி: ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதிகளில் இன்று இரவு 9:30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். எனினும், இந்த நிலநடுக்கத்தில் சேதமோ அல்லது உயிரிழப்புகளோ இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் உள்ள தீர்க்கரேகையில் 36.38 டிகிரி வடக்கே அட்சரேகையிலும், கிழக்கே 70.77 டிகிரியிலும் அமைந்திருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், டெல்லி-என்சிஆர் மற்றும் அருகிலுள்ள பகுதிகள், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் இன்று இரவு 9:30 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி, ஸ்ரீநகர், குல்மார்க் மற்றும் கத்ரா பகுதி, மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்தின் அடிப்படை முகாம் மற்றும் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் மற்றும் பிற நகரங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.
முன்னதாக, இன்று காலை 8:36 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் இன்று காலை 8.36 மற்றும் 10.24 மணிக்கு என இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications