இலங்கை போல் இந்தியா மாறுமா? மாறிமாறி கேள்வியெழுப்பிய எம்.பி.கள்! அமைச்சர் ஜெய்சங்கர் என்ன சொன்னார்?
டெல்லி : இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அந்நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தியாவிலும் அத்தகைய நிலை எழும் என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அந்நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடுமையான அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி தடைபட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கிளர்ச்சி காரணமாக, ராஜபக்ச சகோதரர்கள் நாட்டி விட்டு தப்பி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ள நிலையில், இலங்கையில் அதிபராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இலங்கை அரசு
தற்போது அங்கு அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியா உள்ளிட்ட நட்பு மற்றும் உலக நாடுகளிடம் இலங்கை அரசு இடைவிடாமல் நிதி உதவி பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவில் இருந்து பாஜக தலைமையிலான மத்திய அரசு பல கோடி ரூபாய் கடனுதவிகளை இலங்கைக்கு வழங்கி உள்ள நிலையில், தமிழக அரசும் அனைத்து இலங்கை மக்களுக்கும் நிவாரணப் பொருட்களை அனுப்பியது.

நாடாளுமன்ற கூட்டத் தொடர்
இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன் இலங்கையில் நிலவும் நெருக்கடியில் இந்தியா தலையிட வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து இலங்கை விவகாரங்கள் குறித்தும் இலங்கை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு இன்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர் கலந்து கொண்ட நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவில்லை.

அனைத்து கட்சி கூட்டம்
கூட்டத்தில் எம் தம்பிதுரை (அதிமுக), சவுகதா ரே (திரிணாமுல் காங்கிரஸ்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாடு), சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி), கேசவ ராவ் (தெலுங்கானா ராஷ்டிர சமிதி), ரித்தேஷ் பாண்டே (பகுஜன் சமாஜ் கட்சி), விஜயசாய் ரெட்டி (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்) மற்றும் வைகோ (ம.தி.மு.க) உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், இலங்கையை போல இந்தியாவில் அப்படியொரு நிலை நடக்குமா" என்று நாடாளுமண்ட உறுப்பினர்களான ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், சரத் பவார் மற்றும் டி.ஆர்.பாலு, எம்.எம்.அப்துல்லா உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
அதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்," இலங்கை மிகக் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், அது இந்தியாவை இயல்பாகவே கவலையடையச் செய்கிறது என்றும், அதே நேரத்தில் இந்தியாவிலும் அத்தகைய நிலை எழும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். மேலும், அண்டை நாடான இலங்கையில் ஏற்படும் பிரச்சினைகள் இந்தியாவை லேசாக பாதிக்கும் என்றாலும், அதே போல் நிலை ஏற்பட வாய்ப்பில்லை என்றார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications