உபி வழக்கில் முகமது ஜுபைரின் ஜாமினை நீட்டித்த உச்சநீதிமன்றம்.. ஆனாலும் சிறையில் தான் இருக்கனும்
டெல்லி: உத்தர பிரதேச மாநில போலீசார் பதிவு செய்த வழக்கில் ஆல்ட் நியூஸ் முகமது ஜுபைரின் இடைக்கால ஜாமினை இன்று நீட்டிப்பு செய்த உச்சநீதிமன்றம் 4 வாரத்துக்குள் வழக்கு தொடர்பாக பதிலளிக்ககோரி அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
‛ஆல்ட் நியூஸ்' எனும் ‛பேக்ட் செக்' இணையதளத்தில் இணை நிறுவனர் முகமது ஜுபைர். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார்.
மேலும் வலதுசாரிகள் பரப்பும் செய்திகளின் உண்மை தன்மையை கண்டறிந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

முகமது ஜுபைர் கைது
இந்நிலையில் கடந்த ஜூன் 27 ம் தேதி முகமது ஜுபைரை டெல்லி போலீசார் கைது செய்தனர். 2018 ல் டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்து மத உணர்வை புண்படுத்தியாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து அவரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். அதன்பிறகு நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

உத்தர பிரதேசத்தில் வழக்கு பதிவு
இதற்கிடையே தான் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முகமது ஜுபைர் மீது உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் போலீசார் மற்றொரு வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். ஜூலை 4ம் தேதி முகமது ஜூபைர் வழக்கு தொடர்பாக சீதாபூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சீதாபூர் போலீசார் பதிவு செய்த வழக்கில் கடந்த 8ம் தேதி அவருக்கு உச்சநீதிமன்றம் 5 நாள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும் டுவிட்டரில் கருத்து பதிவிடக்கூடாது என நிபந்தனை விதித்தது.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இந்நிலையில் சீதாபூர் போலீசார் பதிவு செய்த வழக்கில் ஜாமின் கோரி முகமது ஜூபைர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். இதனை கடந்த 8ம் தேதி இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்ததை எதிர்க்கும் முகமது ஜுபைர் மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் டிஒய் சந்திரசூட் மற்றும் ஏஎஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரித்த நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. அதோடு டுவிட்டரில் கருத்து பதிவிடக்கூடாது என நிபந்தனை விதித்தது. மேலும், இந்த உத்தரவு டெல்லி போலீசாரின் வழக்குக்கு பொருந்தாது என கூறப்பட்டது. இதனால் அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.

இடைக்கால ஜாமின் நீட்டிப்பு
அப்போது வழக்கில் பதிலளிக்கவும், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் 4 வாரம் அவகாசம் தரும்படி உத்தர பிரதேச மாநில அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும் அடுத்த உத்தரவு வரும்வரை சீதாபூர் வழக்கில் முகமது ஜுபைரின் இடைக்கால ஜாமினை நீதிமன்றம் நீட்டிப்பு செய்தது. மேலும் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை செப்டம்பர் 7 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறையில் தான் இருக்கனும்
முன்னதாக மத உணர்வை தூண்டியதாக கடந்த ஜூன் 27 ம் தேதி முகமது ஜுபைரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் கோரி முகமது ஜுபைர் சார்பில் டெல்லி செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடத்திய நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜூலை 14ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ஒத்திவைத்தது. இந்த வழக்கில் முகமது ஜுபைருக்கு இன்னும் ஜாமின் கிடைக்காததால் அவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications