என்ன இருந்தாலும் அவர் எங்க பிரதமர்.. இப்படி பேசுவதை ஏத்துக்க முடியாது..சப்போர்ட் ஆக வந்த காங்கிரஸ்
டெல்லி: பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ பேசிய கருத்து ஏற்றுக்கொள்ள முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வேறுபாடுகள் இருந்தாலும் அவர் எங்கள் பிரதமர் எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரையும் சொந்தம் கொண்டாடி வம்புக்கு இழுப்பதை வாடிக்கையாக பாகிஸ்தான் கொண்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சினை
குறிப்பாக சர்வதேச மன்றங்களில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்புவதை பாகிஸ்தான் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த செயல்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கத் தவறுவது இல்லை. இருந்தாலும் திருந்தாத பாகிஸ்தான் தொடர்ந்து இத்தகைய செயலில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.

தரக்குறைவாக விமர்சித்த பாகிஸ்தான் அமைச்சர்
அப்போது பாகிஸ்தானை கடுமையாக சாடியிருந்தார். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்று விமர்சித்து இருந்தார். இதனால், கோபம் அடைந்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ பிரதமர் மோடியை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார். அதாவது குஜராத்தின் கசாப்பு கடைக்காரர் என்ற அர்த்தம் தொனிக்கும் வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். மேலும், இந்திய பிரதமர் மோடியும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று பேசியிருந்தார்.

தரம் தாழ்ந்த கருத்து என பதில்
பிலாவல் பூட்டோவின் இந்தக் கருத்து இந்தியாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிலாவல் பூட்டோவின் கருத்தை உடனடியாக விமர்சித்து பதிலடியை மத்திய அரசு கொடுத்தது. இது தொடர்பாக நேற்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பேசுகையில், ஹபீஸ் சயீத், மசூத் அசார், தாவூத் இப்ராகிம் போன்ற தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான் தரம் தாழ்ந்த கருத்துக்களை கூறியிருக்கிறது என்று சாடினார்.

பாகிஸ்தானுக்கு கண்டனம்
அதேபோல, மத்திய அமைச்சர்களும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறுகையில், தங்கள் நாட்டில் நடக்கும் தீவிரவாத செயல்களை திசை திருப்பவே இதுபோன்ற கருத்துக்களை பாகிஸ்தானின் அமைச்சர் பேசுகிறார்" என்று சாடியிருந்தார். பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து பாஜகவும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தியது. இதனிடையே பிரதமரை இப்படி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கட்சியும் பாகிஸ்தானை விமர்சித்துள்ளது.

யாருக்கும் உரிமை இல்லை
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சத்தீஷ்கர் முதல்வருமான பூபேஷ் பாகேல் கூறியதாவது:- "பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவருக்கு தக்க பதிலடி கண்டிப்பாக கொடுக்க வேண்டும். நமது பிரதமர் குறித்து இப்படி பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. எங்களுக்கு அரசியல் சித்தாந்த வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இது எங்கள் தேசம் மற்றும் பிரதமரை பற்றியது" என்றார்

பாஜகவினர் போராட்டம்
இதற்கிடையே, பிலாவல் பூட்டோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர் என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாஜகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது, பிலாவல் பூட்டோவின் உருவ பொம்மைகளையும் தீ வைத்து எரித்து தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். மகாராஷ்டிர பாஜக தலைவர் போராட்டம் குறித்து கூறுகையில், "நமது பிரதமர் குறித்த எந்த ஒரு கருத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம். நமது இந்து மதத்தை காக்க கடுமையாக போராடுபவர் பிரதமர் மோடி. இதை பாகிஸ்தானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாகவே இத்தகைய கருத்துக்களை பாகிஸ்தான் பேசுகிறது" என்றார்.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
தேன்கூடு ஈரான்.. பாகிஸ்தான் செய்ய போகும் பெரிய உதவி.. இஸ்லாமாபாத் வரும் அமெரிக்க 'மாப்பிள்ளை' -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்!












Click it and Unblock the Notifications