வலிமையான,வளமான மாநிலத்தை உருவாக்க திமுகவுடன் தொடர்ந்து செயல்படுவோம் - ராகுல் ட்வீட்
தமிழ் மக்களுக்கென வலிமையான, வளமான மாநிலத்தை உருவாக்க தி.மு.கவுடன் தொடர்ந்து செயல்படுவோம் என ராகுல்காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி: தமிழ் மக்களுக்கென வலிமையான, வளமான மாநிலத்தை உருவாக்க திமுக உடன் தொடர்ந்து செயல்படுவோம் என்று மு.க ஸ்டாலின் உடனான சந்திப்பு பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இரண்டு நாட்கள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்த அவர், மாலையில் மோடியை சந்தித்து 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இந்த சந்திப்பு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தந்ததாக கூறிய மு.க ஸ்டாலின், உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்று கூறினார்.

நேற்றிரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த முதல்வர், இன்று காலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை அவர்களது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது
சோனியா காந்திக்கு ஜர்னி ஆஃப் எ சிவிலைசேஷன்: இண்டஸ் டு வைகை (Journey of a civilaization indus to vaigai) என்ற புத்தகத்தை பரிசளித்தார். இந்தப் புத்தகம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் ஒடிசா மாநில அரசின் ஆலோசகரும், சிந்து சமவெளி பண்பாட்டு ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணனின் எழுதியதாகும்.

மு.க ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல்காந்தி உடனான சந்திப்பின் போது ஏராளமான புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இந்த புகைப்படங்களை இந்திய காங்கிரஸ் கட்சியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த சந்திப்பு பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, "தமிழ் மக்களுக்கென வலிமையான, வளமான மாநிலத்தை உருவாக்க தி.மு.கவுடன் தொடர்ந்து செயல்படுவோம்" என பதிவிட்டுள்ளார்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications