அடிக்கடி தலைவலி வருதா.. இதை செய்யுங்க பத்தே நொடிகளில் தலைவலி போய்விடும்.. மாத்திரை எல்லாம் வேண்டாம்
டெல்லி: இந்த காலகட்டத்தில் தலைவலி என்பது இளைஞர்களுக்கு அடிக்கடி ஏற்படும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. இந்த தலைவலி எதனால் ஏற்படுகிறது.. வலியைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.
மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் காரணமாக மனிதர்கள் இப்போது பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். இதனால் மனிதர்களின் உடல்நிலையிலும் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் நம்மில் பெரும்பாலோருக்கு தலைவலி முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது. பல நேரங்களில் மருத்துவ காரணங்களால் தான் தலைவலி ஏற்படுகிறது.

தலைவலி காரணங்கள்
ஆனால், சிலருக்கு மன அழுத்தம், நீரிழப்பு, தூக்கமின்மை, இரவு தூங்காமல் நீண்ட நேரம் வேலை பார்ப்பது உள்ளிட்ட காரணங்களாலும் கூட ஒற்றைத் தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. தலைவலியைக் குறைக்கப் பல சிகிச்சைகள் முறைகள் உள்ளன. இருப்பினும், அவை எதுவும் வலியைக் குறைத்து உடனடியாக நிவாரணத்தை அளிப்பதில்லை.. மேலும், சில மருந்துகள், அடிக்கடி எடுத்துக் கொள்ளும்போது, பல பக்க விளைவுகளும் ஏற்படும் ஆபத்து உள்ளது. அதேநேரம் சில மாற்று வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் தலைவலியை விரட்ட முடியும்.

எதனால் ஏற்படும்
இவை வெறும் 10 நொடிகளில் இருந்தே நிவாரணத்தைத் தரத் தொடங்குகிறது. எதன் காரணமாகத் தலைவலி ஏற்படுகிறது என்பது நமக்குத் தெரிய வேண்டும். எந்த வகை தலைவலி ஏற்படுகிறது என்பதை அறிந்து வைத்திருந்தால் மட்டுமே அதற்கேற்ப வலியைக் குறைக்க நம்மால் சிகிச்சை எடுக்க முடியும். திடீரென தலைவலி ஏற்பட சில முக்கிய காரணங்கள் உள்ளன. கோபத்தைக் காட்டாமல் அடக்கி வைப்பது, தவறான போசிஷனில் உட்காருவது, சில ஒத்துக்கொள்ளாத வாசனை, மோசமான வானிலை, அதிக ஒளி தரும் விளக்குகள் காரணங்களாக உள்ளன.

டென்ஷன் தலைவலி
அதேபோல குறிப்பிட்ட உணவுகள், பற்களில் ஏற்படும் பிரச்சினை, நீரிழப்பு, ஹார்மோன் மாற்றங்கள், அதிகம் காஃபின் மற்றும் ஆல்கஹால் எடுத்துக் கொள்வதும் தலைவலியை ஏற்படுத்தும். அதேபோல சில குறிப்பிட்ட வகையிலான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போதும் தலைவலி ஏற்படும் ஆபத்து உள்ளது. இப்படி ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும் கூட பெரும்பாலும் பொதுமக்களுக்கு அதிக டென்ஷன் காரணமாகவே தலைவலி ஏற்படுகிறது.

மாசெட்டர் தசை
நமது உடலில் இருப்பதிலேயே வலிமையான தசை என்பது மாசெட்டர் தசை தான். இது முகத்தில், கன்னம் மற்றும் தாடையைச் சுற்றி அமைந்துள்ளது.. தாடையை நகர்த்துவது தான் இதன் முக்கிய பொறுப்பாகும். நாம் அதிகம் கோபப்பட்டு டென்ஷனாகும் போது.. இந்த தசை உங்கள் கழுத்து, தோள்கள் மற்றும் தலையில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். எனவே, டென்ஷன் காரணமாக ஏற்படும் தலைவலியை ஒரு எளிய மசாஜ் மூலம் குணப்படுத்த முடியும்.

பத்தே மொடிகள்
சரி பத்தே நொடிகளில் தலைவலிக்குத் தீர்வை தரும் இந்த மசாஜ்ஜை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம். உங்கள் விரல்களைக் கொண்டு கன்னத்துக்கு அடியில் இருக்கும் மசாட்டர் தசையை கண்டறியுங்கள். பின், இந்த இடத்தில் மெதுவாக உள்நோக்கியும் கீழ்நோக்கியும் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.. மென்மையாக அந்த பகுதியை அழுத்துங்கள்.. அப்போது மெல்ல உங்கள் வாயைத் திறந்து மூடுங்கள்.. தசை ஏற்கனவே மிகவும் தளர்வாக இருக்கும். இந்த மாசாஜை செய்தால் உங்கள் தலைவலி குறையும்.

மன அழுத்தம்
பலரும் மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது அவர்கள் தாடைகளை இறுக்குவார்கள்.. இப்படி டென்ஷன் காரணமாகத் தலைவலி ஏற்படுவோருக்கு இந்த மசாஜ் பல அதிசயங்களைச் செய்யும்.. மிக விரைவாக நிவாரணம் தர இந்த மசாஜை நாம் பயன்படுத்தப்படலாம். தூக்கத்தில் பற்களைக் கடிக்கும் பழக்கம் கொண்டவர்களும் கூட இந்த முறையைப் பின்பற்றலாம். இதன் மூலம் தலைவலி குறையும்.

தலைவலி
சரி இந்த டென்ஷன் தலைவலியை எப்படிக் கண்டறிய வேண்டும் என்பதைப் பார்க்கலாம். தலையில் மெல்லிய மந்தமான வலி.. நெற்றியில், தலையின் பின்புறத்திலும் இறுக்கம் அல்லது அழுத்தம் போன்ற உணர்வு. கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளில் திடீரென மிகவும் மென்மையாக இருக்கும். டென்ஷன் தலைவலி அடிக்கடி கூட ஏற்படும்.. இதற்குச் சரியான நேரத்தில் சிகிச்சை தரவில்லை என்றால் அதிக சொந்தரவை தரும் ஒற்றைத் தலைவலியாகவும் மாறும் ஆபத்து இருக்கிறது.
மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications