டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரிப்போர்ட் அடிக்கலாம்.. இனி விருப்பம் போல வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை வைக்க முடியாது! வருகிறது புது வசதி

Google Oneindia Tamil News

டெல்லி: சமீபகாலமாக வாட்ஸ் அப்பில் புதுப்புது அப்டேட்டுகள் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், வாட்ஸ் அப்பில் வைக்கப்படும் ஸ்டேட்ஸ்களையும் ரிப்போர்ட் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வாட்ஸ் அப் என்பது ஸ்மார்ட்ஃபோனை போல கிட்டத்தட்ட அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாகவே மாறிவிட்டது. முதலில் வெறுமென எஸ்எஸ்எஸ் போல தகவல்களை பரிமாறும் தளமாகவே இருந்து வந்த வாட்ஸ் அப் இன்றைக்கு அபரிமிதமான வசதிகளை கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் 2.26 பில்லியன் பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க, வாட்ஸ் அப்பை போலவே மேலும் பல செயலிகளும் இணையச் சந்தைக்கு வரத் தொடங்கிவிட்டன. எனவே இந்த செயலிகளுடன் போட்டிப் போட்டும் நிலைக்கு வாட்ஸ் அப் தள்ளப்பட்டிருக்கிறது. அந்த வகையில், பயனர்களை கவர சமீபகாலமாக புதுப்புது வசதிகளை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி வருகிறது.

40 நாடுகளின் விதைகள்.. 700 வெளிநாட்டு மரங்கள்.. 5 ஆண்டுகளில் குட்டி காட்டை உருவாக்கி.. அசத்திய நபர் 40 நாடுகளின் விதைகள்.. 700 வெளிநாட்டு மரங்கள்.. 5 ஆண்டுகளில் குட்டி காட்டை உருவாக்கி.. அசத்திய நபர்

அசத்தல் அப்டேட்கள்..

அசத்தல் அப்டேட்கள்..

உதாரணமாக, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக புகைப்படங்கள், வீடியோக்களை மட்டுமே வைக்க முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது வாய்ஸ் நோட்ஸ்களையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வகையிலான ஒரு புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியது. அதேபோல, வாட்ஸ் அப்பில் delete for everyone-க்கு பதிலாக தவறுதலாக delete for me கொடுக்கும் நபர்களுக்காக undo வசதியையும் வாட்ஸ் அப் கொடுத்து அசத்தி வருகிறது.

ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

இதுபோன்ற வசதிகள் ஒருபுறம் இருக்க, பயனர்களின் பாதுகாப்பு கருதியும் பல முக்கிய அப்டேட்களை வாட்ஸ் அப் வழங்கி வருகிறது. உதாரணமாக, வாட்ஸ் அப் விதிகளை மீறும் சக பயனர்களை ரிப்போர்ட் செய்யும் வசதி ஏற்கனவே உள்ளது. இந்நிலையில், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களுக்கும் இந்த ரிப்போர்ட் செய்யும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது, வாட்ஸ் அப் விதிகளை மீறும் வகையிலான ஸ்டேட்டஸ்களை யாரேனும் வைத்தால், அதை நாம் ரிப்போர்ட் செய்ய முடியும். இதற்காக 'வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்' (whatsapp status report) என்ற ஆப்ஷன் விரைவில் வரவிருக்கிறது.

உண்மைத்தன்மை கேள்விக்குறி..

உண்மைத்தன்மை கேள்விக்குறி..

இப்போதெல்லாம், யார் வேண்டுமானாலும் எந்த ஸ்டேட்டஸ்களை வேண்டுமானாலும் வாட்ஸ் அப்பில் வைக்க முடிகிறது. எனவே, சிலர் இஷ்டத்துக்கு தங்களுக்கு விருப்பமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வைத்துக் கொள்கிறார்கள். சில நேரங்களில் பல பொய்யான செய்திகள், வீடியோக்கள் கூட இவ்வாறு ஸ்டேட்டஸ்களாக வைக்கப்படுகின்றன. இது, ஒரு விஷயத்தை குறித்த தவறான புரிதலையும், பார்வையையும் பலருக்கு ஏற்படுத்திவிடும்.

இனி நடக்காது..

இனி நடக்காது..

இந்நிலையில், தற்போது அறிமுகமாகவுள்ள 'வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்' என்ற வசதியின் மூலம், இதுபோன்ற ஸ்டேட்டஸ் குறித்து நாம் புகார் அளிக்கலாம். பின்னர், சம்பந்தப்பட்ட ஸ்டேட்டஸை வாட்ஸ் அப் குழு ஆராய்ந்து உண்மைத்தன்மையை உறுதி செய்யும். ஒருவேளை, அது உண்மைத்தன்மை இல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட பயனரின் வாட்ஸ் அப் செயல்பாடுகள் மீது சில தடை நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இந்த வசதி ஐபோன், ஆண்ட்ராய்டு ஆகிய இரு பயனர்களுக்கும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

English summary
With the recent updates coming to WhatsApp, a new facility will be introduced to report the status kept on WhatsApp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X