Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படத்தில் ஒரு கொலையாளி இருக்கிறார்? யாருன்னு உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?.. சவாலுக்கு ரெடியா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூசன் படத்தில் ஹோட்டலில் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கிறார். அந்த பெண்ணை கொலை செய்த ஒருவரும் இந்த ஹோட்டலில் தான் இருக்கிறார். அவர் யார்?.. என்று 20 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ் தான்.

கண்களை குழப்பி, மூளைக்கு வேலை கொடுக்கும் ஆப்டிகல் இல்யூசன் படங்களுக்கு இணையத்தில் எப்போதும் தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.

இதுபோன்ற ஆப்டிகல் இல்யூசன் படங்கள் படத்தை பார்ப்பவர்களின் அறிவுத்திறனை சோதிப்பதோடு, மனதுக்கு புத்துணர்ச்சியையும் தருகிறது என்று கூட சொல்லலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் படம்

ஆப்டிகல் இல்யூஷன் படம்

ஆரம்பத்தில் ஆப்டிகல் இல்யூசன் படங்களை பார்க்கும் போது எதை கண்டுபிடிக்குமாறு கூறப்பட்டதோ அது நம் கண்களுக்கு புல்ப்படாத மாறி தான் தெரியும். ஆனால் சற்று உற்று நோக்கி பார்த்தாலோ, அல்லது பார்க்கும் கோணங்களை மாற்றினாலோ படத்தில் கேட்கப்பட்டுள்ள புதிர்களுக்கு நம்மால் எளிதில் விடையளிக்க முடியும். ஒருசில படங்களில் கண்டுபிடிக்க வேண்டிய விலங்குகளோ பறவையோ எதுவும் நம் கண்களுக்கு அவ்வளவு எளிதில் புலப்பட்டு விடாது.

சிந்திக்கும் ஆற்றல்

சிந்திக்கும் ஆற்றல்

இதுபோன்று கண்களை குழப்பும் ஒரு ஆப்டிகல் இல்யூசன் படம் தான் சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது. ஒருசில ஆப்டிகல் இல்யூசன் படங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் விதமாகவே இருக்கும். குறிப்பாக நமது அறிவுத்திறன் மற்றும் சிந்திக்கும் ஆற்றல் என்பதையும் இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். குறிப்பாக அதில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட டைமுக்குள் நாம் கண்டுபிடிப்பதே முக்கியம் என்று சொல்லலாம்.

ஹோட்டல்

ஹோட்டல்

அந்த வகையில் நமது அறிவுக்கு வேலை கொடுக்கும், சிந்திப்பதற்கு ஏற்றார் போல் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி இருக்கிறது. இந்த படத்தில் பெரிய ஹோட்டல் ஒன்று இருப்பதும் ஹோட்டலில் பெண் உள்பட 4 பேர் அமர்ந்து உணவு சாப்பிடுவது போலவும்.. சப்ளையராக ஒருவரும் நின்று கொண்டிருக்கிறார். இதேபோல் வாஷ் ரூமில் ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடக்கிறார்.

5 பேரில் யார் கொலையாளி

5 பேரில் யார் கொலையாளி

ஆம் அங்கு ரத்த வெள்ளத்தில் கிடக்கும் பெண்ணை ஒருவர் கொலை செய்திருக்கிறார். ஆனால் அந்த நபரும் ஹோட்டலில் தான் இருக்கிறார். அந்த கொலையாளியை கண்டுபிடிப்பதே இன்றைய சவால்... படத்தில் 1, 2, 3 4, 5 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நபர்களில் ஒருவர் தான் இந்த பெண்ணை கொலை செய்துவிட்டு அப்பாவி போல் அங்கு இருக்கிறார்... சரி 20 செகண்ட் டைம் எடுத்துக்கோங்க... இந்த கொலையாளி யார் என்று கண்டுபிடியுங்கள்...

யார் கொலையாளி?

யார் கொலையாளி?

போலீஸ் செய்யும் வேலையை நாம் இங்கு பயன்படுத்தி பார்ப்போம்... நீங்கள் ஒரு உளவாளி போல் யோசித்து, சிந்தித்து அங்குள்ள கொலையாளியை கண்டுபிடியுங்கள்... யார் என்று கண்டுபிடிக்க முடிந்ததா?... 20 செகண்டுக்குள் கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்கள் அதீத சிந்தனையாற்றல் கொண்டவர் தான்.. சரி யார் தான் அந்த கொலையாளி என்று பார்த்தால் 1-வது நபரா என்றால் இல்லை.. ஏனெனில் அவர் பார்ப்பதற்கும் சரி உடை அணிகலன் என அனைத்திலும் அவர் மீது சந்தேகம் வர காரணமே இல்லை...

2-வது நபரா?

2-வது நபரா?

சரி 2 வது நபர் என்றாலும் அவரும் அப்படி தெரியவில்லை... 3-வது நபர் என்றால் அவரும் அப்படி தெரியவில்லை.... 4-வது நபரை பார்க்கும் போது ஏதோ சற்று வித்தியாசம் தெரிகிறது என்றால் ஆம் என்றே சொல்லலாம்.. ஏனென்றால் அவரது சட்டை லேசாக கிழிந்திருக்கிறது. மேலும் கையில் லேசான ரத்தக்கறை இருக்கிறது. இதிலும் குறிப்பாக அவர் அணிந்திருந்த சட்டையின் பச்சை கலர் அடங்கிய துணி கொலை செய்யப்பட்ட பெண்ணின் கையில் இருக்கிறது. இதன் மூலம் அவர் தான் கண்டிப்பாக அந்த பெண்ணை கொலை செய்திருக்க முடியும் என ஏறக்குறைய உறுதியாகிவிட்டது...

யார் ஜீனியஸ்

யார் ஜீனியஸ்

5-வது நபரை பார்த்தாலும் அவருக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லாதது போலத்தான் தெரிகிறது. எனவே 4-வது நபரை கொலையாளியாக நீங்கள் நினைத்திருந்தால் அது தான் சரியான பதில்.. அவர்களே ஜீனியஸ்.. அதிக நினைவாற்றல் மற்றும் அறிவுத்திறன் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+