டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் 10,000 படுக்கைகளுடன் உலகின் மிக பெரிய கொரோனா தனிமைப்படுத்துதல் மையம்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் 10,000 படுக்கைகளுடன் உலகின் மிக பெரிய கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தை உருவாக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மையத்துக்கு 20 டிரான்ஸ்பார்மர்கள் மூலம் மின்சார வசதி கொடுக்கப்பட்டு வருகிறது.

நாட்டில் மகாராஷ்டிராவை தொடர்ந்து டெல்லியில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருந்து வருகிறது. டெல்லியில் கொரோனா மரணங்களும் அதிகரித்திருக்கின்றன.

திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 52 பேருக்கு கொரோனா - 24 பேர் டிஸ்சார்ஜ் திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 52 பேருக்கு கொரோனா - 24 பேர் டிஸ்சார்ஜ்

மிகப் பெரிய தனிமைப்படுத்துதல் முகாம்

மிகப் பெரிய தனிமைப்படுத்துதல் முகாம்

இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக தெற்கு டெல்லியில் ராதா சோமி ஆன்மீக மையத்தில் 10,000 படுக்கைகளுடன் கூடிய கொரோனா தனிமைப்படுத்துதல் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதான் உலகின் மிகப் பெரிய குவாரண்டைன் முகாம்.

12,50,000 சதுர அடியில் முகாம்

12,50,000 சதுர அடியில் முகாம்

மொத்தம் 22 கால்பந்து மைதானங்களின் அளவில் இந்த உலகின் மிக பிரமாண்டமான கொரோனா தடுப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 12,50,000 சதுர அடி கொண்டதாக இந்த தடுப்பு முகாம் அமைகிறது. தற்போது இந்த தடுப்பு முகாமுக்கு மின்சார வசதிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

20 டிரான்ஸ்பார்மர்கள் மூலம் மின்சாரம்

20 டிரான்ஸ்பார்மர்கள் மூலம் மின்சாரம்

22 கி.மீ தொலைவுக்கு தரைக்கு கீழே கேபிள்கள் பதிக்கப்பட்டு 20 டிரான்ஸ்பார்மர்கள் மூலம் மின்சாரம் வழங்கும் பணி மேற்கொள்ளபட்டு வருகிறது. 15 நாட்களிலேயே இந்த தடுப்பு முகாமுக்கான முழு அளவிலான மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான பணியில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் ஏற்பாடு

சர்வதேச அளவில் ஏற்பாடு

இந்த டிரான்ஸ்பார்மர்கள் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டவை. ஆயில் மூலம் செயல்படாதவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு டிரான்ஸ்பார்மரும் 1,000 கிலோவாட் மின்சாரம் சக்தி கொண்டதாக இருக்கும். அனைத்து ஏற்பாடுகளும் சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

English summary
22 km of underground cables and 20 transformers will power the quarantine facility of 10,000 beds at the Radha Soami spiritual centre in South Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X