Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹோலி பெயரில்.. வெளிநாட்டு பெண் உடலில் கண்ட இடத்தில் கை வைத்த நபர்கள்? நடந்தது என்ன?

ஹோலி பண்டிகை கொண்டாடிய வெளிநாட்டு பெண்ணை இளைஞர்கள் நடுரோட்டில் மானபங்கம் செய்ததாக ஆறு வருடம் முன்பு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இப்போது நடந்தது போல் பரவி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது ஒரு பெண்ணை சிலர் கொண்டாட்டம் என்ற பெயரில் மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் டெல்லியில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்தது என fact check இல் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு எப்போத நடந்த சம்பவத்தை இப்போது நடந்தது போல் வீடியோவாக பதிவிட்டு அது பற்றி இப்படியாக ஒரு கருத்தை ஒரு நபர் பதிவிட்டுள்ளார்.

"வெளிநாட்டவர் தனது மனைவி எப்படி துரத்தப்படுகிறார் மற்றும் துன்புறுத்தப்படுகிறார் என்பதை விளக்குகிறார்... வக்கிரமானவர்கள் அவரை எப்படி "வேடிக்கையாக" ஒரு ஆடையை போல் பயன்படுத்துகிறார்கள்" என கோபமாக பதிவிட்டிருந்தார்.

டெல்லி போலீஸ்

டெல்லி போலீஸ்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் பலர் இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இவர்கள் மீது டெல்லி போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்கள்.

வெளிநாட்டு பெண்

வெளிநாட்டு பெண்

அந்த வீடியோவில் கோலிப் பண்டிகை கொண்டாடியபடி நடந்து வந்த பெண்ணை , சிலர் கண்ட இடங்களில் கொடுக்கிறார்கள். ஒருவர் மார்பகம் அருகே கை வைக்கிறார் இன்னொருவர் பின்பக்கம் கை வைக்கிறார் ஒருவர் கட்டி பிடிக்கிறார் இப்படியாக அந்த வீடியோ சென்று கொண்டே இருக்கிறது.

வக்கிரம்

வக்கிரம்

இரினா அக்பர் என்பவர் வெளியிட்ட பதிவில், கணவன் ஏன் மனைவியை வக்கிரமானவர்களிடமிருந்து பாதுகாக்கவில்லை? மனைவி ஏன் சிரிக்கிறார்?" என்று கேட்டுள்ளார்.அதற்கு ராய் என்பவர் இந்த வீடியோவை பார்த்து இப்படி பதிவிடுகிறார். " ஒருவேளை இதை முதன்முறையாகப் பார்த்து, எதையும் செய்ய பயந்திருக்கலாம்... அவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கலாம்". என கூறியுள்ளார்.

தகாத உறவு

தகாத உறவு

இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், கண்ணாடியில் தெரியும் பையனைப் பாருங்கள். முதலில் அவரைத் தகாத முறையில் தொட்டுவிட்டு மீண்டும் மூன்று முறை அவரைத் தடவிக் கொடுக்கிறான்.... என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.

பாலின பிளவு

பாலின பிளவு

வருண் நாயர் என்பவர் வெளியிட்ட பதிவில், "ஆண்களை பெண்களுடன் பேசவோ அல்லது பழகவோ அனுமதிக்காத நமது "இந்திய கலாச்சாரம்" இதற்குக் காரணம். பாலினங்களுக்கு இடையே நீங்கள் எவ்வளவு பிளவுகளை உருவாக்குகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அது மற்றவரின் மனதில் ஆர்வத்தை உருவாக்கும், மேலும் பெரும்பாலும் இந்த ஆர்வம் மிகவும் மோசமான வழிகளில் தூண்டப்படுகிறது." என கூறியுள்ளார்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில்,ஹோலி பண்டிகையின் போது இந்தியாவில் தாங்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று கணவனும் மனைவியும் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வெளிநாட்டவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அபாயத்தை எடுத்துக் கொண்டுள்ளனர். மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும் என்று கூறியிருந்தார். இப்படி பலரும் கண்டனங்கள் தெரிவிக்கும் அளவுக்கு வைரல் ஆன வீடியோ உண்மையில் இப்போது எடுக்கப்பட்டது இல்லை என்பது நிஜமாகும். எப்போதே நடந்த விஷயத்தை இப்போது நடந்தது போல பரப்புகிறார்கள்.

ஏன் தடுக்கவில்லை

ஏன் தடுக்கவில்லை

அதே நேரம் ஒரு சிலர் செய்த தவறுக்காக கோலிப்பண்டிகையையும் நமது கலாச்சாரத்தையும், இழிவு படுத்துவதை ஏற்க முடியாது என்று நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்தனர் . வீடியோ எடுத்துக் கொண்டிருந்த கணவன் ஏன் அதை தடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் வீடியோ வெளியாகி ஆறுவருடத்திற்கு பிறகு இப்படி திட்டமிட்டு வீடியோவை பரப்பி உள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இப்போது நடக்கவில்லை

இப்போது நடக்கவில்லை

ஆல்ட் நியூஸ் நிறுவனர் முகமது ஜூபைர் இந்த வீடியோ குறித்து ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ஆறு வருடம் முன்பு நடந்த சம்பவத்தை இப்போது நடந்தது போல் பரபரப்பி வருகிறார்கள் என்று விளக்கி உள்ளார். எனவே இந்த வீடியோ பழைய வீடியோ என்றும், இப்போது இதுபோன்ற எந்த இடத்திலும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு செய்தி பரவுகிறது என்றால் அந்த செய்தி உண்மையா என்பதை பேக்ட் செக் மூலம் உறுதி செய்து கொள்ளுங்கள்,.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+