தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜாதி சொல்லி ஓட்டுக்கேட்டேனா? என் அப்பா பேரு பின்னாடியே ஜாதியில்ல.. அண்ணாமலைக்கு திமுக எம்பி பதிலடி

Google Oneindia Tamil News

தருமபுரி: தேர்தலில் ஜாதி பெயரை சொல்லி வாக்கு சேகரித்ததாக தருமபுரி தொகுதி திமுக எம்பி செந்தில்குமார் மீது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், தன்னுடைய தந்தை பெயருக்கு பின்னால் கூட சாதி பெயர் இல்லை என்றும் கூறி அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு செந்தில்குமார் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

தருமபுரியில் நேற்று பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அந்த கூட்டத்தில் பேசிய அவர், திமுகவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் தருமபுரி தொகுதி திமுக எம்பி செந்தில்குமாரி மீது அவர் குற்றம்சாட்டினார்.

கட்சிக்காரர்களுக்கு கமகமக்கும் அசைவ விருந்து! கமல்ஹாசன் விடுத்த அழைப்பு! பின்னணி என்ன? கட்சிக்காரர்களுக்கு கமகமக்கும் அசைவ விருந்து! கமல்ஹாசன் விடுத்த அழைப்பு! பின்னணி என்ன?

செந்தில்குமார் பேச்சு

செந்தில்குமார் பேச்சு

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தருமபுரி எம்பி செந்தில் குமார் பேசினார். "கடந்த நகராட்சி தேர்தலில் 14 வார்டுகளில் பாஜக போட்டியிட்டு மொத்தமாக வெறும் 352 வாக்குகளும் தமிழக பாஜகவிற்கு அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜகவினர் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 59 இடங்களில் போடியிட்டு மொத்தம் 1082 வாக்குகளையுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளனர்.

ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்

ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்து விபரம் தெரியாமல் பேசுகிறார் ஒகேனக்கல் குடிநீர் இரண்டாவது திட்டத்திற்கான மதிப்பு 450 கோடி என தவறான தகவல் தெரிவித்துள்ளார் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டம் மக்கள் பயன்பெறும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இரண்டாவது திட்டத்தின் பதிப்பு 7 ஆயிரத்து 980 கோடி ரூபாய் ஆகும் இந்த திட்டத்தை அடுத்த மாதத்தில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

என் பெயர் பின்னால் சாதி இல்லை

என் பெயர் பின்னால் சாதி இல்லை

மேலும் மக்களுக்கான குடிநீர் திட்டத்தில் அண்ணாமலை அரசியல் செய்கிறார். ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தில் குளோரைடு அளவு அதிக அளவு இல்லை. திமுக தமிழ்நாட்டில் வலுவாக உள்ளது என தெரிவித்தார்.நான் தேர்தலின் போது ஜாதி பெயரை கூறி ஓட்டு கேட்டதாக அண்ணாமலை பேசியுள்ளார் எனது தந்தை தனது பெயரின் பின் ஜாதி இல்லை.

பிரதமரை வீழ்த்துவோம்

பிரதமரை வீழ்த்துவோம்

தற்பொழுது பிரதமர் நரேந்திர மோடி இரண்டு தொகுதிகளில் தமிழகத்தில் போட்டியிட போவதாக நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது. அவர் தருமபுரி மாவட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் திமுக சார்பில் எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் பிரதமரை தோற்கடித்த பெருமையை திமுகவிற்கு வழங்குவோம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையே தருமபுரி மாவட்டத்தில் தேர்தலில் நின்றாலும் டெபாசிட் இழக்க செய்வோம்.

பிரதமரின் சாதி பெயர்

பிரதமரின் சாதி பெயர்

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்பி செந்தில்குமார், சாதி அடையாளங்களை பட்டியல் சமுதாய மக்கள் பயன்படுத்துவது இல்லை எனவும், உயர் சாதியினர் மட்டுமே பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். பிரதமரை அனைவரும் நரேந்திர மோடி என்றே அனைவரும் அழைத்து வருவதாகவும், ஆனால் நான் அவரை நரேந்திர என்றுதான் அழைப்பேன் எனவும் கூறினார்.

பாஜக விமர்சனம்

பாஜக விமர்சனம்

மனிதர்களின் மனித நேயத்தை வைத்தே மதிப்பிட வேண்டும் எனவும், சாதி அடையாள பெயரை வைத்து மதிப்பிடக்கூடாது என அவர் ஆற்றிய உரை விவாதப்பொருளானது. இந்த நிலையில், 2019 தேர்தல் சமயத்தில் செந்தில்குமார் தன்னுடைய தாத்தாவின் சாதி பெயரை சொல்லி வாக்கு சேகரித்ததாக பாஜகவினர் ஒரு பேனரின் புகைப்படத்தை பகிர்ந்து விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamil Nadu BJP president Annamalai has accused DMK MP Senthilkumar of Dharmapuri constituency of collecting votes by using caste name. Senthilkumar has refuted Annamalai's allegation saying that even his father's name does not have a caste name behind it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X