எல்லாமே இனிமேல் நல்லா தான் நடக்கும்! அன்புமணி ராமதாஸுக்கு தருமபுரி கொடுத்த நம்பிக்கை! ஓட்டாக மாறுமா?
தருமபுரி : தருமபுரி காவிரி உபரிநீர் திட்டத்தினை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று நாட்கள் நடைபயண பிரச்சாரத்தினை அன்புமணி ராமதாஸ் தொடங்கிய நிலையில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் பாமகவினர் உற்சாக அடைந்துள்ள நிலையில், அது தேர்தலில் வாக்குகளாக மாறிமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
Recommended Video
தருமபுரி காவேரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற, வலியுறுத்தி மூன்று நாள் நடைபயணம் பிரச்சாரத்தை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேற்று ஒகேனக்கலில் தொடங்கியுள்ளார்.
இன்று இரண்டாவது நாள் பிரச்சாரம் தொடங்கியதில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினரும், பொது மக்களும் உற்சாக வரவேற்பை அளித்துள்ளனர். ஒவ்வொரு இடமாக நடந்து சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அன்புமணி ஈடுபட்டார்.

அன்புமணி ராமதாஸ்
குரும்பட்டி டீ கடை பகுதியில் ஒவ்வொரு கடையாக ஏறி சென்று துண்டு பிரசுரங்களை வழங்கிய போது, டீக்கடைக்காரர் ஒருவர் டீ சாப்பிடுங்க என்றதும், உடனடியாக போட்டுக் கொடுத்த டீயை வாங்கி குடித்துவிட்டு, பிரசாரத்தின் நோக்கத்தினை, திட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றி டீக்கடைக்காரர் குடும்பத்தினரிடம் எடுத்துரைத்தார். அதே பகுதியில் வெங்காய வியாபாரி ஒருவர் நின்று இருக்க, அவரிடம் இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றியும் ஏன் இதற்கு நடை பயணம் விழிப்புணர் பிரச்சாரம் மேற்கொள்கிறேன் என்பதை பற்றியும் விளக்கி கூறினார்.

பாமகவின் உற்சாகம்
நடுப்பட்டி என்னும் இடத்தில் பெண்கள் அன்புமணியை சூழ்ந்து கொள்ள, அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, அவர்களின் மொபைல் ஃபோனில் அன்புமணியே செல்ஃபி பிடித்துக் கொடுத்தார். தொடர்ச்சியாக கடத்தூரில் ஒன்றரை கிலோ மீட்டருக்கும் மேலாக மலர் தூவி அன்புமணியை வரவேற்றனர். மேலும் அங்கே சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தியும் பிரச்சாரத்தில் இருந்தவர்களையும், பொதுமக்களையும் கலையாமல் பார்த்துக் கொண்டனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். கடத்தூரில் கூட்டத்தை கண்ட அன்புமணி மேடையை விட்டு இறங்கி வந்து கூட்டத்தினருடன் ஐக்கியமாகிவிட்டார். கூட்டத்தின் நடுவே நின்று பேச ஆரம்பித்து விட்டார்.

காவிரி உபரி நீர் திட்டம்
நத்தமேடு பகுதியில் பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் என அன்புமணியை பாமகவினர் வரவேற்ற நிலையில், ஒவ்வொரு இடங்களிலும் காவிரி உபரி நீர் திட்டத்தை நாம் ஏன் செய்ய வேண்டும்? இந்த திட்டத்தினை நிறைவேற்றினால் எவ்வளவு பேர் பயனடைவார்கள்? இதனால் தர்மபுரியில் தீரக்கூடிய பிரச்சனைகள் என்ன? என்பதை விளக்கி கூறினார். அதோடு ஒவ்வொரு ஊரிலும் துண்டு பிரசுரங்களையும் அன்புமணியே நேரில் சென்று ஒவ்வொருவரிடம் வழங்கி வருகிறார். நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்புகள் கிடைப்பதாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.

ஓட்டாக மாறுமா?
அதே நேரத்தில் அன்புமணியின் இந்தப் பயணம் தேர்தல் அரசியலுக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் திமுக வேட்பாளர் செந்தில்குமாரிடம் தோல்வி அடைந்தார். தொடர்ந்து அவர் மாநிலங்களவை சார்பில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் நேரடி அரசியலில் அவர் பின்தங்கியதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தர்மபுரி பயணம் தேர்தல் அரசியலை அன்புமணி ராமதாஸுக்கு வரும் தேர்தலில் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications