Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்னப்பையனுடன் சங்கீதா.. அதுவும் வாசற்படியிலயே.. அதிர்ந்த போலீஸ்.. கைக்குழந்தையை தவிக்கவிட்ட கொடுமை

போலீஸ் ஸ்டேஷனில் விஷம் குடித்து காதல் ஜோடி உயிரிழந்தது

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: கட்டிய கணவனையும், கைக்குழந்தையையும் தவிக்கவிட்டுவிட்டு, கள்ளக்காதலனுடன் ஓடிய சங்கீதாவின் வாழ்வு துயரத்தில் முடிந்துள்ளது..!

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார்... இவர் ஒரு கட்டிட மேஸ்திரி. மனைவி பெயர் சங்கீதா.. 20 வயதாகிறது.

இவர்களுக்கு திருமணம் நடந்து 2 வருடங்கள் ஆகிறது.. இந்த தம்பதிக்கு 11 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி 2 பேருமே திருப்பூரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர்.

 ஊர்க்காரர்கள்

ஊர்க்காரர்கள்

அதேபோல், பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சின்னப்பையன் என்பவரும் இங்கேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் 20 வயதாகிறது... அதாவது சங்கீதாவின் கணவரும், சின்னபையனும் பக்கத்து பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதால் நெருங்கி பழகி வந்துள்ளனர்... அதனால், சின்னபையன் அடிக்கடி இவர்களின் வீட்டிற்கும் வந்துள்ளார்... அப்போது, சங்கீதாவிடம் நெருங்கி பழங்கியுள்ளார். அது நாளடைவில் கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது.

 தலைமறைவு

தலைமறைவு

சதீஷ்குமார் வீட்டில் இல்லாத சமயத்தில் சின்னபையனுடன் சங்கீதா தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.. ஒருநாள் இந்த விவகாரம் சதீஷ்குமாருக்கு தெரிந்துவிட்டதால், அவர் சங்கீதாவை கண்டித்துள்ளார்... இங்கே இருப்பதால்தானே உறவு தொடர்கிறது என்று நினைத்து, சங்கீதாவை அழைத்துச்சென்று, அவரது அம்மா வீட்டில் விட்டுள்ளார். ஆனால், அம்மா வீட்டில் இருந்தே எஸ்கேப் ஆனார் சங்கீதா.. தன்னுடைய 11 மாத குழந்தையை வீட்டிலேயே விட்டு விட்டு, சின்னபையனுடன் தலைமறைவானார்.

 சின்னப்பையன்

சின்னப்பையன்

இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ந்துபோன சதீஷ்குமார், பென்னாகரம் போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் அந்த கள்ளக்காதல் ஜோடியை தேட ஆரம்பித்தது.. போலீசார் தேடுவதை அறிந்த சங்கீதா, பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு வருவதாக உறவினர் ஆறுமுகத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதன்படியே மறுநாள் கள்ளக்காதல் ஜோடி போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தது. அப்போது ஸ்டேஷன் வாசலிலேயே சின்னபையனும், சங்கீதாவும் திடீரென மயங்கி விழுந்துள்ளனர்.

சிகிச்சை

சிகிச்சை

இதனைக் கண்ட போலீசார் அவர்களை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்... அங்கு இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள், விஷம் குடித்துள்ளாக கூறினர்.. பின்னர், 2 பேருக்கும் முதலுதவி சிகிச்சை தந்து, மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... ஆனாலும், எவ்வளவோ சிகிச்சை தர முயன்றும், இருவரையுமே டாக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை.. கள்ளக்காதல் ஜோடி போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து உயிரை விட்ட சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+