புதுச்சேரி சோபிகா.. திண்டுக்கல்லில் செய்த வேலை.. மாப்பிள்ளை தான்.. அய்யோ பாவம்!
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்த பெண்ணை - கையும் களவுமாகப்பிடித்து இளைஞர் போலீசில் ஒப்படைத்தார். போலீசிடம் சிக்கிய பெண், நகை மற்றும் பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டார். இந்நிலையில் வேறு யாரை ஏமாற்றி உள்ளார் என்பது குறித்தும் சோபிகா என்ற அந்த பெண்ணை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி இவர் இங்கு வியாபாரம் செய்து வருகிறார். இவர் திருமணம் செய்வதற்காக கௌரி மேட்னிமனி மூலம் பெண்ணைத் தேடி உள்ளார்.
அப்பொழுது இடைத்தரகர்கள் மூலம் பாண்டிச்சேரி நேரு தெருவை சேர்ந்த சோபிகா என்ற பெண்ணை பார்த்துள்ளார் பெண் பிடித்துப்போகவே திருமணம் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நம்பிய செல்லபாண்டி
அப்பொழுது தனக்கு தாய் தந்தை யாரும் இல்லை என்றும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சுனாமியில் இருவரும் இறந்து விட்டதாக பெண் சோபிகா கூறி உள்ளார். இதனை நம்பிய செல்லப்பாண்டி கடந்த 11.03.21 அன்று எளிமையான முறையில் பாண்டிச்சேரியில் வைத்து நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளார்.

எஸ்கேப்
நிச்சயதார்த்தத்தின் போது ஒன்றரை பவுன் செயின், பட்டுப்புடவை, 25000 ரொக்கம் ஆகியவற்றை சோபிகாவிடம் கொடுத்துள்ளார். அதன்பின் சோபிகா விடமிருந்து கடந்த 5 மாதங்களாக எவ்விதமான தொடர்பும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த செல்லப்பாண்டி தனது உறவினரை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரியில் உள்ள சோபிகாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

திருமண மோசடி
ஆனால் வீடு வாடகைக்கு விடப்படும் என பலகை இருந்துள்ளது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்லப்பாண்டி அருகில் உள்ளவரிடம் விசாரித்தபோது அந்தப் பெண் மோசடிப் பேர்வழி என கூறியுள்ளனர் இதேபோல் பலரையும் திருமணம் செய்வதாக ஏமாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிக்கிய சோபிகா
இதனையடுத்து அந்தப் பெண்ணை பிடிப்பதற்காக திட்டம் தீட்டிய செல்லபாண்டி சோபிகாவின் உறவினரை தொடர்பு கொண்டு திருமணத்திற்காக புடவை மற்றும் நகை எடுக்க வேண்டும் ஆகையால் திண்டுக்கல்லுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து இன்று 10.08.21 திண்டுக்கல் வருகை தந்த சோபிகாவை பிடித்து வைத்துக் கொண்டு மோசடி செய்தது தொடர்பாக கேட்டபொழுது சோபிகா தான் செய்தது தவறு என்றும் செல்லப்பாண்டி இடமிருந்து வாங்கிய நகை பட்டுப்புடவை பணம் ஆகியவற்றை திரும்பத் தருவதாக கூறியுள்ளார்.

விசாரணை
இதனை ஏற்காத செல்லப்பாண்டி திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த சோபிகா மீது புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த பெண்ணை தந்திரமாகப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications