திண்டுக்கல்லில் குடும்ப தகராறு.. கதவை தட்டியும் திறக்காத மனைவி.. இறந்ததாக கருதி கணவர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: நீண்ட நேரம் கதவை தட்டியும் மனைவி கதவை திறக்காததால் அவர் இறந்துவிட்டதாக கருதிய காவலர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேடசந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கோகுல் நகரில் வசித்து வருபவர் ரத்தினகிரி இவர் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு நாகஜோதி என்ற மனைவியும். இரண்டு மகள்களும் உள்ளனர்.

நாகஜோதி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தனித்தனி அறை

தனித்தனி அறை


இதில் கணவன் மனைவி தனித்தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் அதிகாலை 3 மணி அளவில் தன் மனைவி நாகஜோதி தூங்கிக் கொண்டிருந்த அறையை பலமாக தட்டி உள்ளார் ரத்தினகிரி. இதில் நாக ஜோதியின் அறை நீண்ட நேரமாக திறக்கப்படாததால் நாகஜோதி தற்கொலை செய்து கொண்டதாக கருதியுள்ளார் ரத்தினகிரி.

மனமுடைந்தார் கணவர்

மனமுடைந்தார் கணவர்

இதனால் மனமுடைந்த அவர் செய்வதறியாது திகைத்து நின்று தனது அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் அறையின் கதவை தட்டிக் கொண்டே இருந்த கணவர் சிறிது நேரத்திற்குப் பின் எவ்வித சப்தம் இன்றி இருந்ததால் அவர் தூங்கிவிட்டதாக நினைத்து நாகஜோதி தனது அறையில் உறங்கினார் பின்பு காலையில் எழுந்து அறையின் கதவை திறந்தபோது கதவு திறக்க முடியாமல் போனதால் அருகிலிருந்த உறவினர்களுக்கு நாகஜோதி தகவல் கொடுத்தார்.

கதவை தட்டிய கணவன்

கதவை தட்டிய கணவன்

தகவல் அறிந்து விரைந்து வந்த உறவினர்கள் கதவை உடைத்து நாகஜோதியை மீட்டனர். பின்பு ரத்தனகிரி உறங்கிக்கொண்டிருந்த அறையின் கதவையும் உடைத்து பார்த்தபோது ரத்தனகிரி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

வேடசந்தூர் காவல் நிலையம்

வேடசந்தூர் காவல் நிலையம்

அதன்பிறகு வேடசந்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த காவல்துறையினர் ரத்தினகிரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்துவிட்டார் என கருதி தற்கொலை செய்துகொண்ட கணவரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+