சின்னசேலம் மாணவி மர்ம மரணம்! ‘சமூக விரோதிகள்’ உள்ளே புகுந்துட்டாங்க! கொந்தளித்து பேசிய கேஎஸ் அழகிரி!
திண்டுக்கல் : கள்ளக்குறிச்சியில் மாணவி மர்ம மரணமடைந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் கோபப்பட்டு உள்ளார்கள் அதை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து வன்முறையாக மாற்றி உள்ளார்கள். காவல்துறை அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி இருந்தபடியே 12ம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்நிலையில் மாணவி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்று அவரது பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த நில நாட்களாக அமைதியான முறையில் நடைபெற்று வந்த போராட்டம் இன்று கலவரமாக வெடித்தது.

கே.எஸ்.அழகிரி
பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், பள்ளியை சூறையாடியதோடு பள்ளிப் பேருந்துகளை தீவைத்துக்கொளுத்தினர். கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்ற போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் மாணவி மர்ம மரணமடைந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் கோபப்பட்டு உள்ளார்கள் அதை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து வன்முறையாக மாற்றி உள்ளார்கள். காவல்துறை அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறித்தியுள்ளார்.

முழுமையான விசாரணை
இவ்விவகாரம் குறித்து திண்டுக்கல்லில் பேசிய கே.எஸ்.அழகிரி," கள்ளக்குறிச்சி சின்னசேலம் சிறுமி மரணம் காவல்துறை முழுமையான விசாரணைக்கு அப்புறம் தான் தெளிவாக தெரிய வரும். அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் உறவினர்கள் கிராமத்தினர் கொஞ்சம் எழுச்சி அடைந்ததை குற்றம் என்று சொல்ல முடியாது.

சமூக விரோதிகள்
அவர்கள் கோபப்பட்டு உள்ளார்கள் அதை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து வன்முறையாக மாற்றி உள்ளார்கள். காவல்துறை அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். காவல்துறை இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுகிறது. மக்கள் கோவப்பட்டு உள்ளார்கள். சமூக விரோதிகள் உள்ளே நுழைந்தது தான் தவறு.

அரசியல் ஆக்க கூடாது
பள்ளியை பாதுகாப்பது அவர்களுடைய கடமை அதை அவர்கள் தவறி உள்ளனர். குழந்தையின் பாதுகாப்பை தனியார் துறை செய்ய தவறினாலும் தவறுதான் அரசாங்கம் செய்யத் தவறினாலும் தவறுதான். தனியார் பள்ளிகளை சார்ந்தவர்கள் இதனை அரசியல் ஆக்க கூடாது. குழந்தையின் மரணத்தை மறைத்து விட்டு வேறு கோணத்தில் செல்வது என்பது தவறு." என கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications