போலீசில் சிங்கம்..கிக் பாக்சிங் தங்கம்..ரவுடிகளுக்கு சிம்மசொப்பனம்.. யார் இந்த எஸ். ஐ. இசக்கி ராஜா?
திண்டுக்கல் : 60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய நீராவி முருகனை திண்டுக்கல் தனிப்படை போலீசார் கைது செய்ய முயற்சிக்கும் போது என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ள நிலையில், என்கவுண்டருக்கு தலைமை வகித்த சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா யார் என்ற பெயரை பலரும் தேடி வருகின்றனர்.
Recommended Video
ஆனால் நெற்றியில் துப்பாக்கி வைத்து விட்டு தான் பேசுவது, வாட்ஸ் ஆப்பில் ரவுடிக்கு மிரட்டல் என பல ஆண்டுகளாக அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர் தான் இந்த இசக்கி ராஜா..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவா் இசக்கி ராஜா. இவா் ரவுடிகளை கட்டுப்படுத்தும் வகையில் எச்சரிக்கை செய்து வெளியிட்ட ஆடியோ 2018ஆம் ஆண்டு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

எஸ்.ஐ. இசக்கி ராஜா
"யாராவது குரூப் ஆரம்பிச்சி ரௌடித் தனம் பன்னுனா மொத்தமா தூக்கீருவேன்" என்று கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய உதவி ஆய்வாளராக இருந்த போது பேசினார் இசக்கி ராஜா. அப்போது அவர் தான் ரியல் சிங்கம் என மக்களும் ஊடகங்களும் கொண்டாடின. ரவுடி ஒருவருக்கு பதில் அளித்து வெளியிட்ட ஆடியோவில் "என்ன நினைச்சிட்டு இருக்கீங்க, காசு கொடுத்து தான் வெட்டத் தொியும். சுயமா எதுவும் செய்ய முடியாது. உங்களை எல்லாம் காசு கொடுத்து தீவிரவாதி மாதிாி வச்சிருக்காங்க.

அதிரடி பேச்சு
மூளைச்சலவை செஞ்சி சாராயம் வாங்கி கொடுத்து உங்களை எல்லாம் தீவிரவாதியாக்கி வச்சிருக்காங்க. இந்த அப்துல் ரகீம் கிட்ட சொல்லு. நான் கோவில் பட்டில இருக்குர வரைக்கும் கூலிப்படைய வச்சி அருவா புடிக்கணும்னு நினைச்சா இசக்கி ராஜா என்ன பண்ணுவேன்னு தொியாது. எங்க இருந்தாலும் தூக்குவேன். யாராவது குரூப் ஆரம்பிச்சா தொலைச்சிருவேன் என்று அவா் கம்பீரமாக பேசிய ஆடியோ தான் அப்போது ஹாட் டாபிக்.

திண்டுக்கல்லில் பணி
தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றிய இசக்கி ராஜா சிறப்பான செயல்பாடுகள் காரணமாக , திண்டுக்கல் மாவட்ட தனிப்பிரிவிலும் இடம்பெற்றார். அவரோடு திண்டுக்கல் கிரைம் பிரிவில் மிக முக்கிய இடம் பிடித்த காவலர்கள் சத்யராஜ், ஷேக் முபாரக், காங்கு மணி ஆகியோரும் அந்த பிரிவில் இடம் பெற்றனர். போலிசில் மட்டுமல்ல இசக்கி ராஜா மிகச்சிறந்த கிக்பாக்ஸிங் வீரரும் கூட. ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய சீனியர் கிக்பாக்ஸிங் போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்ட அவர், 85 முதல் 90 கிலோ பிரிவு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நிலையில், சாம்பியன் ஆப் சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

நீராவி முருகன் என்கவுண்டர்
இந்நிலையில் தான் பழனியில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக விசாரிக்க சென்ற போது, இசக்கியின் துப்பாக்கிக்கு பலியாகியுள்ளார் நீராவி முருகன். இதன் காரணமாக மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறார் இவர். பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த நீராவி முருகனை திண்டுக்கல் தனிப்படை போலீசார் தேடிவந்தனர். தமிழ்நாடு முதல் குஜராத் வரை பல்வேறு மாநிலங்களில் நீராவி முருகன் மீது வழக்குகள் உள்ளது. குறிப்பாக திண்டுக்கல், நிலக்கோட்டை, பழனி ஆகிய இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக நீராவி முருகன் மீது வழக்குகள் இருந்தது.

அதிரடி நடவடிக்கை
ஒட்டன்சத்திரம் பகுதியில் மருத்துவர் வீட்டில் தம்பதிகளை கட்டி போட்டுவிட்டு வீட்டிலிருந்த 150 பவுன் நகை, 25 லட்சம் ரூபாய் பணம், கார் உள்ளிட்டவற்றை திருடி சென்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் பழனி காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து நீராவி முருகனை தேடிவந்தனர். இந்நிலையில் தான் நெல்லை களக்காடு பகுதியில் நீராவி முருகனை கைது செய்யமுற்பட்டபோது போலீசாரை திரும்ப தாக்கி வெட்ட முயன்றதால் நீராவி முருகன் என்கவுன்டர் செய்யப்பட்டதாகவும், 4 போலீசார் காயமடைந்ததாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications