பாசிட்டிவ் சிக்னல்.. உலகக் கோப்பையை ஆஸி. வென்றதில் இந்திய அணிக்கு ஒரு குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
துபாய்: 2021 டி 20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வகையில் ஆடி ஆஸ்திரேலியா இந்த கோப்பையை வென்றுள்ளது.
கடைசியாக நடைபெற்ற 5 டி 20 தொடர்களில் வரிசையாக ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், வங்கதேசம் என்று வரிசையாக 5 டி 20 தொடர்களில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது.
இப்படி தொடர் தோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலியா அணி இந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் வெல்ல வாய்ப்பே இல்லை என்றுதான் கருதப்பட்டது. அந்த அணி மீது கிரிக்கெட் வல்லுனர்கள் யாரும் பெரிதாக நம்பிக்கை வைக்கவில்லை.

நம்பிக்கை
அதோடு ஆஸ்திரேலியா அணி செமி பைனல் செல்வதே சந்தேகமாக இருந்தது. ஆனால் அதை எல்லாம் உடைத்து ஆஸ்திரேலியா அணி மிக சிறப்பாக ஆடி செமி பைனல் சென்று பின்னர் வலுவான பாகிஸ்தானை வீழ்த்தி பைனல் சென்றது. ஆஸ்திரேலியா அணி நேற்று நியூசிலாந்தை உலகக் கோப்பை டி 20 தொடரில் வீழ்த்தி முதல்முறை கோப்பையை வென்றுள்ளது.

கோப்பை
நேற்று டாஸ் தோல்வி அடைந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து சிறப்பாக ஆடி 172/4 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா 2 ஓவரிலேயே வேகம் எடுத்தது. இரண்டாவது ஓவரிலேயே அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்து வார்னர் ஆட்டத்தில் வேகத்தை அதிகரித்தார். வெறும் 38 பந்தில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி என்று 53 ரன்களை வார்னர் அடித்தார்.

வார்னர்
அதன்பின் ருத்ரதாண்டவம் ஆடிய மிட்சல் மார்ஷ் 50 பந்துகளில் 4 சிக்ஸ், 6 பவுண்டரி என்று 77 ரன்கள் எடுத்தார். இவர்தான் நேற்று மொத்தமாக ஆட்டத்தை மாற்றியது. இதனால் ஆஸ்திரேலியா 18.5 ஓவரில் எளிதாக 173-2 ரன்கள் எடுத்து வென்றது. அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இந்த தொடரில் எடுத்த முடிவுகள் எல்லாமே சிறப்பாக இருந்தது.

ஜஸ்டின் லாங்கர்
ஆம், ஜஸ்டின் லாங்கர்தான் மிட்சல் மார்ஷை இந்த தொடருக்கு முன்பாக 3வது இடத்தில் இறங்கும்படி கூறினார். ஸ்மித் மூத்த வீரர் என்றாலும் அவர் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்பதால் அவரின் ஆர்டரை மாற்றினார். டவுன் ஆர்டர் ஆடி வந்த மேக்ஸ்வெல்லை நேற்று 4வது இடத்தில் இறக்கினார். இதெல்லாம் போக பார்மில் இல்லாத வார்னர், ஸ்டானிஸ் ஆகியோருக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தார்.
Recommended Video

டி 20
டி 20 தொடரில் ஒரு பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் மிக சிறப்பாக வியூகங்களை வகுத்தார். அதனால்தான் வியூகங்களுக்கு பெயர் போன நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலியா எளிதாக வீழ்த்தியது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஜஸ்டின் லாங்கர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியவர். அவர் ஒரு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட். 105 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார். அதில் 7696 ரன்கள் எடுத்துள்ளார்.

ஜஸ்டின் லாங்கர் எப்படி
ஜஸ்டின் லாங்கர் வெறும் 8 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார். இது தவிர்த்து பிக்பாஸ் லீக் தொடரில் பெர்த் அணிக்கு மட்டுமே இவர் கோச்சிங் வழங்கி உள்ளார். டி 20 தொடர்களில் அது மட்டுமே இவருக்கு இருக்கும் அனுபவம். இதில் இந்திய அணிக்கு என்ன சாதகமான விஷயம் என்றால்.. இந்திய அணியின் புதிய கோச் ராகுல் டிராவிட்டும் இதே போன்ற ஸ்டைல் கொண்டவர்தான்.

டெஸ்ட்
ராகுல் டிராவிட்டும் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட். பெரிய அளவில் டி 20 அனுபவம் கிடையாது. ஐபிஎல்லில் ஆடி இருக்கிறார், அதேபோல் பிபிஎல்லி ஜஸ்டின் கோச் செய்தது போல டிராவிட்டும் ஐபிஎல்லில் கோச் செய்துள்ளார். இது ஒரு வகையில் ஒற்றுமை என்று பார்த்தால் இருவரின் கோச்சிங்கும் ஒரே மாதிரியானதுதான். இரண்டு பேருமே இளம் வீரர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பார்கள்.

ஆடம் சாம்பா
இரண்டு பேருமே பவுலர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். பார்மில் இல்லாத வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு தந்து ஆதரவு அளிப்பார்கள். இருவருமே நீண்ட பயிற்சி அனுபவம் கொண்டவர்கள். ஆடம் சாம்பா போன்ற வீரர்கள் கடந்த வருடம் சரியாக ஆடாத போதும் ஜஸ்டின் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கினார். ராகுல் டிராவிட்டும் அப்படிப்பட்டவர்தான்.

ராகுல்
ஒரு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் டி 20 கலையை கற்று அணிக்கு பயிற்சி கொடுத்து ஆஸியை கோப்பை வெல்ல வைத்துள்ளார். இது ஒரு வகையில் இந்திய அணிக்கு பாசிட்டிவ் சிக்னலாக பார்க்கப்படுகிறது. ஜஸ்டின் செய்ததை ராகுல் டிராவிட் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவரும் டி 20 கலையை கற்று இந்திய அணியை அடுத்த வருடம் நடக்க உள்ள உலகக் கோப்பை டி 20 தொடரில் வெல்ல வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications