துபாயில் தேஜஸ் விமானம் விபத்து.. சாகசம் செய்யும்போது கீழே விழுந்து நொறுங்கியது! ஷாக் வீடியோ
துபாய்: துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் விமானம் விபத்திற்குள்ளாகி உள்ளது. விமான கண்காட்சியில் சாகசம் செய்யும்போது விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேஜஸ் விமானம் சாகசம் செய்தபோது, கீழே விழுந்து நொறுங்கிய வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார்.
ஐக்கிய அமீரகத்தின் துபாயில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை துபாய் ஏர்ஷோ நடக்கும். அதன்படி இந்தாண்டு இப்போது விமான கண்காட்சி நடந்து வருகிறது. அதில் பல்வேறு நாடுகளும் தங்கள் விமானங்கள், போர் ஜெட்களை காட்சிப்படுத்தியுள்ளன. மேலும், அப்போது விமானங்கள் சாகசங்களை மேற்கொள்ளும். அதைப் பார்க்கவும் மக்கள் அதிகமாகத் திரள்வார்கள். அதன்படி இன்று வழக்கம் போலவே ஏர்ஷோ நடந்தது.

தேஜஸ் போர் விமானம்
இன்றைய தினம் இந்தியாவின் தேஜஸ் போர் விமானமும் அங்குக் காட்சிப்படுத்தப்பட்டது. இதற்கிடையே அங்கு இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இன்று பிற்பகல் 2:10 மணியளவில் விமானம் விபத்துக்குள்ளானது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. விமானம் தரையில் விழுந்த பிறகு, அங்கிருந்து கருப்புப் புகை எழும்பியது. இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தேஜஸ் என்பது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு போர் விமானமாகும். இந்த விபத்திற்கு என்ன காரணம் என்பது உறுதியாகத் தெரியவில்லை. துபாய் உலக சென்ட்ரல் பகுதியில் உள்ள அல் மக்தூம் சர்வதேச ஏர்போர்ட்டில் விமான சாகசம் செய்யும்போது விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விமானி உயிரிழப்பு
பொதுவாக இதுபோன்ற விபத்து ஏற்படும்போது, விமானத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் பைலட் எஜெக்ட் ஆகிவிடுவார். ஆனால், இந்த விபத்தில் வீடியோவை பார்க்கும்போது அவர் வெளியேறியது போல தெரியவில்லை. இதற்கிடையே விபத்தில் விமானி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை இந்திய விமானப்படை தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம் உயிரிழந்த விமானி யார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும், விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
A clearer video of the Indian Air Force LCA Tejas before the crash has emerged and it appears to be a case of a misjudged manoeuvre by the aircrew.
— Tactical Tipu (@Tactical_Tipu) November 21, 2025
The LCA Tejas was performing aerobatics at the Dubai Air Show 2025. pic.twitter.com/aZBMarve3p
நிறுத்தம்
விபத்து ஏற்பட்டவுடன் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விமானம் தீப்பற்றி எரிந்த நிலையில், அதை அணைத்தனர். இருப்பினும், அதற்குள் தீ விபத்தால் விமானம் முழுமையாகக் கருகியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏர்ஷோ தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து நடந்த அல் மக்தூம் சர்வதேச ஏர்போர்ட் ஐக்கிய அமீரகத்தின் இரண்டாவது பெரிய விமான நிலையமாகும்.
துபாயில் தங்கம் வாங்கப் போகிறீர்களா? வரி இல்லாமல் இந்தியாவுக்கு எவ்வளவு கொண்டு வரலாம் தெரியுமா?
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்
இந்த தேஜஸ் போர் விமானம் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்த இந்த தேஜஸ் தான் இந்தியாவின் முதல் உள்நாட்டுப் போர் விமானமாகும். எனினும், இதில் வெளிநாட்டு எந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்புப் படைக்கு மிகப் பெரிய வலிமையைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் விமான டெலிவரி தாமதமாகியுள்ளது.
தேஜஸ் விமானம் பாதுகாப்பு படையில் சேர்க்கப்பட்ட சில ஆண்டுகள் ஆகிறது. மேலும், தேஜஸ் விமானம் இதுபோல விபத்தில் சிக்குவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்தாண்டு மார்ச் மாதம் ஜெய்சால்மர் அருகே ஒரு தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது. ஆனால், அந்த விபத்தில் விமானி பத்திரமாக வெளியேறினார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications