ரமலான்.. தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலவாரிய குழு சார்பில் துபாயில் நோன்பு திறந்த இஸ்லாமியர்கள்!
துபாய்: ரமலான் பண்டிகை வரும் 11ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை (ஏப்.1) அன்று துபாயில் தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலவாரிய குழு உறுப்பினரும், அமீரக திமுக அமைப்பாளருமான எஸ்.எஸ்.மீரான் ஏற்பாட்டில் 'நோன்பு திறக்கும் நிகழ்ச்சி' தேரா பகுதியில் அமைந்துள்ள கிரவுண் பிளாஸா ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இஸ்லாமியர்களை பொறுத்த வரை ரமலான் மாதம் என்பது, இறைவனை நெருங்கவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் ரமலான் திருநாளில் கடவுள் பெயரில் பலியிடப்படும் இறைச்சி, ஏழைகள், நண்பர்கள் மற்றும் தன்னுடைய குடும்பத்திற்கு என மூன்று பங்காக பிரிக்கப்பட்டு வழங்கப்படும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த ரமலான் பண்டிகை வரும் 11ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், துபாயில் தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலவாரிய குழு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியிருக்கிறது. இந்நிகழ்வை ஆசிஃப் மீரான் தொகுத்து வழங்கினார்.
வரவேற்புரை வழங்கிய வளைகுடா பகுதி அயலக தமிழர் நலவாரிய குழு உறுப்பினரும், அமீரக திமுக அமைப்பாளருமான எஸ்.எஸ்.மீரான், புனிதமிகு ரமலான் நோன்பு நிகழ்ச்சிக்கு அழைப்பினை ஏற்று வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த இஃப்தார் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய துபாய்க்கான இந்திய துணை தூதர் சதீஷ்குமார் சிவன், அயலக தமிழர் வாரியமும், அயலக தமிழர்களுக்கென்று தனி அமைச்சகமும் அமைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வெகுவாக பாராட்டினார். மேலும் அயலக தமிழர் வாரிய செயல்பாடுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும், "இந்தியாவிலிருந்தும் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருக்கிறோம். அதே போல் தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த போதிலும் நல்லவற்றிற்காக ஒன்று சேர்ந்திருக்கிறோம். நம்மால் முடிந்தவரை இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் அதோடு மட்டுமில்லாமல் நம்முடைய நாட்டிற்கும், நாம் சார்ந்திருக்கும் மாநிலத்திற்கும் திருப்பி நல்லவற்றை கொடுக்கவேண்டும். இது போன்ற வாய்ப்பை அளித்த அயலக தமிழர் நலவாரிய குழு உறுப்பினர் எஸ்.எஸ். மீரானுக்கு நன்றியை தெரிவித்து வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்" என்று பேசியிருந்தார்.

இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு his excellency easa salih al ghurair (ஈசா சாலிஹ் அல்குரைர்), டெக்டன் லெட்சுமணன் ஈமான் தலைவர் பி.எஸ்.எம்.ஹபீபுல்லாஹ், லேண்மார்க் சாதிக் ,SNG குழுமத்தின் செயல் தலைவர் மரியம் சலாஹுதீன், தாஹா, அல் அய்ன் முஸ்தஃபா,காயிதே மில்லத் பேரவை ஹமீது ரஹ்மான், துபாய் தமிழ் சங்கம் லியாகத் அலி, நடராஜன், பொன்மாலை பொழுது கணேசன், ஆட்டோவிஷன் பைரோஸ், கோல்டன் கோர் சம்சுதீன், திருச்சிகோல்ட் ஹபிபுல்லா, முதுவை ஹிதாயத், சோனாராம், ஆர்ஜே.சாரா, லட்சுமி பிரியா, தொழிலதிபர் ஜெஸிலா, ஆர்.ஜே.அஞ்சனா, மதிமுக பாலா, செய்யது, விசிக அசோகன், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த ஹாதி, இப்ராஹிம், அலைடுமோட்டார்ஸ் கமால், ரமாமலர் மற்றும் அபுதாபி அய்மான் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள், கமால் கேவிஎல், நஜீம், கலந்து கொண்டனர்.

நிறைவாக ஏஜிஎம் பைரோஸ்கான் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஜவேரியா ரஷீது, பிளாக்துலிப் செந்தில், இளமுருகன்,திரிகூடபுரம் முஸ்தஃபா, வி.எம்.பிரபு, இஞ்சினியர் பாலா, அஹமது கபீர், ஃபரீத், பருத்தி இக்பால், பாண்டியன், அன்பு, செந்தில் பிரபு, தாரிக், அமீன், பன்னீர்செல்வம், தமிழ் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications