Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு வேகத்தில் அப்படி பேசிவிட்டேன்.. இந்திய மேட்சில் நமாஸ் செய்த பாக். வீரர்.. மன்னிப்பு கேட்ட யூனிஸ்

Subscribe to Oneindia Tamil

துபாய்: இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் தொழுகை செய்தது குறித்து கருத்து தெரிவித்திருந்த பாக் முன்னாள் வீரர் வாக்கர் யூனிஸ் தனது கருத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

2021 உலகக் கோப்பை டி 20 தொடரில் பாகிஸ்தான் அதிரடியாக ஆடி வருகிறது. அடுத்தடுத்து இந்தியா, நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி பாகிஸ்தான் கலக்கி உள்ளது.

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறை பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக வெற்றியை பதிவு செய்துள்ளது.

தொழுகை

தொழுகை

இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் ஆட்டத்திற்கு நடுவே தொழுகை செய்தார். 5 வேளை தொழுகையில் இரவு நேர தொழுகையை ரிஸ்வான் ஆட்டத்தின் இடைவேளையின் போது செய்தார். இந்த வீடியோ இணையம் முழுக்க வெளியாகி வைரலானது. ஆட்டத்தின் போது இடைவெளியில் இவர் தொழுகை மேற்கொண்டது பெரிய அளவில் கவனம் பெற்றது.

 வைரல்

வைரல்

இது ஒருவரின் தனிப்பட்ட வழிபாட்டு உரிமை, மத நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. ரிஸ்வான் செய்ததில் எந்த தவறும் இல்லை என்றாலும் கூட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் இதற்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தனர். இந்த வீடியோவிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Recommended Video

    கறுப்பின மக்களுக்கு ஆதரவாக மண்டியிட மறுத்த Quinton de K0ck.. ரசிகர்கள் கடும் விமர்சனம்
    வாக்கர் யூனிஸ்

    வாக்கர் யூனிஸ்

    இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாக்கர் யூனிஸ் இந்த வீடியோ குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்று தெரிவித்து உள்ளார். அதில், பல லட்சம் இந்துக்களுக்கு முன் ரிஸ்வான் நமாஸ் செய்தார். அது எனக்கு ஸ்பெஷல் விஷயமாக இருந்தது. இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை விட அதுதான் அதிக ஸ்பெஷல் விஷயமாக எனக்கு பட்டது, என்று வாக்கர் யூனிஸ் அந்த டிவி நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

     சர்ச்சை

    சர்ச்சை

    டிவி நிகழ்ச்சி ஒன்றில் வாக்கர் யூனிஸ் இப்படி குறிப்பிட்டு இருந்தார். ஏற்கனவே பாகிஸ்தான் இந்தியா போட்டியால் இணையத்தில் பெரிய மோதல் நடந்து வரும் நிலையில் வாக்கர் யூனிஸ் இப்படி பேசியது பெரிய சர்ச்சையானது. வாக்கர் யூனிஸ்க்கு எதிராக இணையத்தில் கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட பலர் கடுமையாக கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில்தான் வாக்கர் யூனிஸ் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

    மன்னிப்பு

    மன்னிப்பு

    இது தொடர்பாக வாக்கர் யூனிஸ் செய்துள்ள ட்விட்டில், ஒரு வேகத்தில், பலரின் மனதை புண்படுத்திய விஷயம் ஒன்றை நான் கூறிவிட்டேன். நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை. நான் என்னுடைய கருத்துக்காக மன்னிப்பு கேட்கிறேன். நான் வேண்டும் என்றே பேசவில்லை. தவறு நிகழ்ந்துவிட்டது. விளையாட்டு என்பது இனம், நிறம், மதம் தாண்டி மக்களை ஒன்றிணைக்க கூடியது, என்று வாக்கர் யூனிஸ் மன்னிப்பு கேட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+