ஈரோடு கிழக்கு தொகுதி: முதல் ஆளாக வந்த தேர்தல் மன்னன் பத்மராஜன்.. 233-வது முறையாக வேட்பு மனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் மன்னன் பத்மராஜன் முதல் ஆளாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே அதிக தேர்தலில் போட்டியிட்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4 ஆம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.
ஒரு தொகுதி காலியாக இருந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

10-ந்தேதி கடைசி தேதி
இதனால், தமிழக அரசியல் கட்சிகளின் மொத்த பார்வையும் ஈரோடு கிழக்கு தொகுதி பக்கம் திரும்பியது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. தினமும் காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய ஃபிப்ரவரி மாதம் 7-ந்தேதி கடைசி நாளாகும். 8-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கும். வேட்பு மனுக்களை திரும்ப பெற ஃபிப்ரவரி மாதம் 10-ந் தேதி கடைசி நாள் ஆகும் வேட்பாளர்களில் பொது பிரிவினர் டெபாசிட் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவினர் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.

4 பேர் மட்டுமே வரவேண்டும்
வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வரவேண்டும். 3 கார்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவுக்கு முன்பே கார்களை நிறுத்திவிட வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

முதல் ஆளாக வந்த பத்மராஜன்
இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நாளே தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்ய வருகை தந்தார். குடியரசுத்தலைவர் தேர்தல் முதல் அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வேட்பு மனுவை தாக்கல் செய்து வரக்கூடியவர் பத்மராஜன். இது தொடர்பாக பத்மராஜன் கூறுகையில், "1988-ல் இருந்து தொடங்கி இதுவரை 233 வது தேர்தலை சந்திக்கிறேன். கடசியாக குடியரசுத்தலைவர், துணைக்குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டேன். டெபாசிட் தொகைக்காக மட்டும் சுமார் 1 கோடி ரூபாய் செலவு செய்துள்ளேன்" என்றார்.

பஞ்சர் கடை வைத்துள்ளேன்
தொடர்ந்து அவர் கூறுகையில், சேலம் மாவட்டம் மேட்டூர் எனது சொந்த ஊராகும். பஞ்சர் கடை வைத்துள்ளேன். முதல் முதலாக 1988-ம் ஆண்டு மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டேன் அதன்பிறகு அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறேன். இதுவரை 32 எம்.பி. தேர்தல்கள், 6 குடியரசு தலைவர் தேர்தல்கள், 6 துணை குடியரசு தலைவர் தேர்தல்கள், 72 சட்டமன்ற தேர்தல்கள், கவுன்சிலர் தேர்தல்கள் பஞ்சாயத்து யூனியன் தேர்தல்கள் என அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு உள்ளேன்.

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றேன்
தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டதால் எனது நண்பர்கள் உறவினர்கள் கிண்டலடித்தனர். அதிக தேர்தலில் போட்டியிட்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன் இதற்காக 233 தடவையாக இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

10 ரூபாய் நாணயங்கள்
அதேபோல், டெபாசிட் தொகையாக வெறும் நாணயங்களை மட்டுமே செலுத்துவதற்காக காந்தி ரமேஷ் என்பவர் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்தார். கையில் தராசுடன் வருகை தந்திருந்த ரமெஷ் 100 சதவீத வாக்கு பதிவு செலுத்தப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காகவும் 10 ரூபாய் நாணயங்களை பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications