கள்ளக்காதலி வீட்டிற்கு தந்தை.. திடீரென அங்கு வந்த மகன்.. ஈரோட்டில் அடுத்தடுத்து நடந்த 2 பயங்கரம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தந்தை கள்ளக்காதலை கைவிடாததால் ஆத்திரம் அடைந்த மகன் அவரை வெட்டிக்கொலை செய்தார். இந்த சம்பவம் ஈரோடு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செல்லப்பகவுண்டன் வலக நல்ல மூப்பனூர் பிரிவு பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுணன் (55). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (50). தம்பதியருக்கு செந்தில்குமார் (35) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
செந்தில்குமார் திருமணமாகி தந்தை வீட்டின் அருகே தனி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அர்ச்சுணனுக்கும் வேறு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இது தொடர்பாக பலமுறை தந்தையை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை.

தப்பி சென்றார்
இந்நிலையில் நேற்றிரவு ஆப்பக்கூடல்-அந்தியூர் சாலை நல்லாமூப்பனூர் பிரிவு கள்ளக்காதலி வீட்டில் சென்று விட்டு வந்த தந்தையை கண்ட மகனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இதனால் அர்ச்சுணனுக்கும், மகன் செந்தில்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செந்தில்குமார் அரிவாளினால் தந்தையை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

வழக்கு பதிவு
ரத்த வெள்ளத்தில் கிடந்த அர்ச்சுணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையை மகனே வெட்டிக்கொன்ற சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு கள்ளக்காதல்
ஈரோட்டில் கயிற்றால் கழுத்தை இறுக்கி பெயிண்டர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணியுடன் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். ஈரோடு வி.வி.சி.ஆர். நகர், வளையக்கார வீதி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் மதன் (வயது 29). இவருக்கு திருமணம் ஆகவில்லை. மதன் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரது பெரியம்மா மகன் மகேஸ்வரன். இவருடைய மனைவி மஞ்சு (25). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சண்டை ஏற்பட்டுள்ளது
மகேஸ்வரன் தனது குடும்பத்துடன் ஈரோடு சாஸ்திரி நகரில் வசித்து வந்தார். உறவினர் என்பதால் மதன், மஞ்சு வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களுடைய கள்ளக்காதல் விவகாரம் மஞ்சுவின் கணவருக்கு தெரியவந்தது. இதனால் மகேஸ்வரன் தனது மனைவி மஞ்சுவை கண்டித்தார்.
அதனால் கணவன், மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கணவர் மகேஸ்வரனை விட்டு பிரிந்து தனது 6 வயது மகளுடன் ஈரோடு ரங்கம்பாளையம், இரணியன் வீதியில் கடந்த 2 மாதங்களாக கொழுந்தனார் மதனுடன் மஞ்சு குடும்பம் நடத்தி வந்தார்.

கழுத்து இறுக்கி கொலை
மதன் தினமும் குடிபோதையில் வந்து மஞ்சுவை அடிப்பதோடு, பாலியல் தொல்லையும் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் மதனுக்கும், மஞ்சுவிற்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இரண்டு நாளைக்கு முன்பு இரவு வழக்கம் போல் மதன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, மஞ்சுவிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சு கயிற்றால் மதன் கழுத்தை இறுக்கியுள்ளார். பின்னர் மதனின் உறவினர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்ட மஞ்சு குடிபோதையில் வீட்டிற்கு வந்த மதன் மயங்கி விழுந்ததில் பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உறவினர்கள் புகார்
இதனால் மதனின் உறவினர்கள் பதறியபடி மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர். அப்போது, மதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மதனின் கழுத்து கயிற்றால் இறுக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. இதனால் சாவில் மர்மம் இருப்பதாக ஈரோடு தாலுகா போலீசில் நேற்று காலை உறவினர்கள் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, மதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி, சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா ஆகியோர் மஞ்சுவிடம் விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலன் ராஜாவுடன் சேர்ந்து மதனை கொலை செய்ததை மஞ்சு போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications