ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ப்பா! ஈரோடு கிராமத்து சந்தையில் அதிசயம்! 4 மணி நேரத்தில்.. பல கோடி ரூபாய்க்கு நடந்த விற்பனை! எப்படி?

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோட்டில் நேற்று நடந்த கிராமத்து சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை சந்தைகள் நடக்கும். முக்கியமாக பல கிராமங்களில் வியாழக்கிழமை சந்தை நடக்கும்.

பல சந்தைகளில் ஆடு, மாடுகள், விவசாய பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படும். இப்போதெல்லாம் வியாழக்கிழமை சந்தைகளில் மின்னணு சாதனங்கள், பர்னிச்சர் சாதனங்கள் போன்றவைகளும் கூட விற்பனை செய்யப்படுகின்றன.

இதனால் வியாழக்கிழமை சந்தைகளில் முன்பை விட அதிக அளவில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

கோவை மாணவியின் “தற்கொலை கடிதம்” நினைவிருக்கா? 9 மாத விசாரணையில் திடீர் திருப்பம்! 2 முதியவர்கள் கைது கோவை மாணவியின் “தற்கொலை கடிதம்” நினைவிருக்கா? 9 மாத விசாரணையில் திடீர் திருப்பம்! 2 முதியவர்கள் கைது

வியாழக்கிழமை

வியாழக்கிழமை

இந்த நிலையில் ஈரோட்டில் புஞ்சை புளியம் பட்டி நேற்று வியாழக்கிழமை சந்தை நடத்தப்பட்டது. எப்போதும் வியாழக்கிழமை சந்தை அங்கு நடக்கும் என்றாலும் நேற்று ஏற்பாடுகள் பெரிய அளவில் செய்யப்பட்டு இருந்தன. கண்டிப்பாக பல பகுதிகளில் இருந்து மக்கள் பொருட்களை வாங்கவும், விற்கவும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை எதிர்பார்த்து, அதற்கு ஏற்றபடி நேற்று அங்கு சந்தைக்கு பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த சந்தைக்கு நேற்று பல கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்திருந்தனர். ஈரோட்டை சேர்ந்த 30-40 கிராம் மக்கள் இங்கு குவிந்தனர். எதிர்பார்த்ததை விட கூட்டம் நேற்று அதிகமாக இருந்தது. காய்கறிகள், விவசாய பொருட்கள், வீட்டு சாதன பொருட்கள் கூட நேற்று சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் பல வகை மாடுகள், ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. கறுப்பு மாடு, காளைகள், இளம் கன்றுகள், எருமை மாடுகள் என்று பல வகையான கால் நடைகள் விற்பனை செய்யப்பட்டன.

எவ்வளவு

எவ்வளவு

அதேபோல் ஆடுகளில் பல வகைகள் விற்பனை செய்யப்பட்டன. ஆட்டுக்குட்டிகளும் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. கோழி, கோழி குஞ்சுகள், முட்டைகளும் விற்பனை செய்யப்பட்டன. இதனை பல கிராம மக்கள், விவசாயிகள் ஆர்வமாக விலைபேசி வாங்கினார்கள். பல இடங்களில் நீண்ட நேரம் பேரம் பேசிம் விலைக்கு வாங்கினார்கள். முக்கியமாக மாடுகளை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினார்கள்.

 வாரம் தோறும் வியாழக்கிழமை

வாரம் தோறும் வியாழக்கிழமை

இந்த நிலையில் நேற்று மட்டும் மொத்தமாக 2 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது. இந்த சந்தை வெறும் 4 மணி நேரம்தான் நடந்தது. 4 மணி நேரத்தில் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது பெரிய பரபரப்பாய் ஏற்படுத்தி உள்ளது. இதுவரை அந்த சந்தையில் நடைபெற்ற விற்பனையில் இதுதான் மிகவும் அதிகமானது. தொடர்ந்து இதேபோல் பிரம்மாண்டமாக விற்பனை செய்வோம் உள்ளூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Erode Market Sale touched 2 crore rupees in just 4 hours: How did it happen?. ஈரோட்டில் நேற்று நடந்த கிராமத்து சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X