தமிழ் அழகான மொழி.. ஒருநாள் நிச்சயம் தமிழில் நன்றாகப் பேசுவேன்.. உருகிய ஆளுநர் ஆர்.என்.ரவி!
ஈரோடு : தமிழ் மக்கள் போல் தமிழ் பேச வேண்டும் என்பது என்னுடைய விருப்பம், நிச்சயம் ஒருநாள் சிறப்பாக தமிழ் பேசுவேன் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், தீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ் மொழியைப் புகழ்ந்து பேசினார். அப்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தீரன் சின்னமலை நினைவு நாள்
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தியதோடு, அவரது திருவுருவப் படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அரச்சலூரில் உள்ள கொங்கு சமூக ஆன்மீக கல்வி கலாச்சாரம் மற்றும் தீரன் சின்னமலை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற தீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

உயிர்த்தியாகம் செய்தவர்
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தீரன் சின்னமலை சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். சுதந்திரத்திற்காகத் தீரன் சின்னமலை உயிரைத் தியாகம் செய்தவர் எனப் பேசினார்.

சிறந்த பாரதம்
மேலும் பேசிய ஆர்.என்.ரவி, "நமது நாட்டின் விடுதலைக்காக உயிரைக் கொடுத்தவர்களை எப்போதும் மறக்கக் கூடாது. சிறந்த பாரதத்தை உருவாக்குவதே தீரன் சின்னமலைக்கு நாம் செலுத்தும் நன்றி எனத் தெரிவித்தார். மேலும், தமிழ் பழமையான மொழி, அழகான மொழி" எனத் தெரிவித்தார்.

தமிழில் நிச்சயம் பேசுவேன்
தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழ் மக்களைப் போல் தமிழ் பேச வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஒருநாள் நிச்சயம் தமிழில் நன்றாகப் பேசுவேன்" எனத் தமிழிலேயே தெரிவித்தார். இந்தி மொழியை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு ஆதரவாகப் பேசிவந்த ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபகாலமாக தமிழ் மொழியை உயர்த்திப் பேசி வருவது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications