தொழில் அதிபரான அர்ஜூனின் 2-வது மகள்.. யாருமே செய்ய முடியாத ஹேண்ட்பேக் பிசினஸ்.. அடேங்கப்பா சூப்பர்!
ஹைதராபாத்: நடிகர் அர்ஜூனின் முதல் மகள் ஐஸ்வர்யா சினிமாவில் நடித்து வரும் நிலையில், 2-வது மகள் அஞ்சனா யாருமே செய்ய முடியாத பழ தோல்களால் ஹேண்ட் பேக் செய்யும் பிசினஸ் செய்து புதிய தொழில் அதிபராக மாறியுள்ளார்.
ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜூன் 1990 களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தார்.
தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்தி படத்திலும் நடித்துள்ளார்.

நடிகர் அர்ஜுன்
தற்போதும் வில்லன், குணச்சித்திர வேடம் என பிஸியாகவே அர்ஜூன் இருக்கிறார். அர்ஜூன் கடந்த 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் உள்ளன. மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகையாக உள்ளார். தமிழில் விஷாலுடன் பட்டத்து யானை படத்தில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஹேண்ட் பேக்குகள் தயாரிக்கும் நிறுவனம்
அர்ஜூனின் இளைய மகளான அஞ்சனா சினிமாவில் நடிப்பாரா? என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சினிமா பக்கம் தலைகாட்டாத அஞ்சனா, தொழிலதிபராக வேண்டும் என்றே ஆசைப்பட்டதாக தெரிகிறது. தனது விருப்பப்படியே அஞ்சனா தொழில் அதிபராகியிருக்கிறார். ஹேண்ட் பேக்குகளை தயாரிக்கும் நிறுவனத்தை அஞ்சனா தொடங்கியுள்ளார்.

பழ தோல்களால் தயார் செய்யப்படுகிறது
தெலுங்கானா மாநிலம் ஐதரபாத்தில் இந்த நிறுவனத்தி தொடக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். ஹேண்ட் பேக்குகள் என்றால் சாதாரணமாக தோல் பொருட்கள் மற்றும் இதர ரப்பர் போன்ற பொருட்களின் செய்யப்படும் என்று நினைத்துவிடக்கூடாது. இதில் தான் சிறப்பம்சம் உள்ளது. ஏனென்றால், அஞ்சனாவின் நிறுவனத்தின் தயாரிக்கப்படும் ஹேண்ட்பேக்குகள் முழுக்க முழுக்க பழ தோல்களை கொண்டு தயார் செய்யப்படுவதாகும்.

வலுவானதாக இருக்கும்
முழுவதும் பழ தோல்களை கொண்டு உருவாக்கப்படும் இந்த பேக்குகள், பிற பேக்குகளை போன்று பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் வலுவானதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சார்ஜா என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் தொடக்க விழா தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியின் நிர்வாக இயக்குனர் விஜய ஈஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications