என்ன தான் நடக்கிறது தெலுங்கானாவில்? மிருகங்களான 5 பேர்.. அலறித்துடித்த சிறுமி! மூடி மறைத்த போலீசார்
ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சொகுசு காருக்குள் வைத்து சிறுமி ஒருவர் ஆளும் கட்சி பிரமுகர்களின் மகன்கள் உள்ளிட்டோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஓய்வதற்குள் மீண்டும் ஒரு சிறுமி 5 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், அதனை போலீசார் மூடி மறைத்ததும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த மே 28 அன்று 17 வயதான சிறுமி 5 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட சிறுமி அங்குள்ள பப்பிற்கு 5 சிறுவர்களுடன் வந்துள்ளார்.
நிகழ்ச்சி முடிந்து சிறுமியை வீட்டிற்கு கொண்டு சென்றுவிடுவதாக கூறி கூட வந்த 5 சிறுவர்கள் சிகப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ஏற்றியுள்ளனர்.

பாலியல் பலாத்காரம்
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அந்த சிறுமியை காருக்குள்ளேயே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் தெலுங்கனாவில் ஆளும் முதல்வர் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பிரமுகர்களின் வாரிசுகள் சிக்கியிருப்பதாகவும், அவர்களை தப்பிக்க வைக்க காவல்துறையினர் முயல்வதாக பகீர் புகார் கிளம்பியது. விவகாரம் பெரிதான நிலையில் ஓவைசி கட்சியின் எம்எல்ஏவின் மகனும் சிறுமியை பலாத்காரம் செய்த காரில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அடுத்தடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிர்ச்சி சம்பவம்
இந்நிலையில் தற்போதும் மேலும் ஒரு சிறுமி 5 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், அதனை போலீசார் மூடி மறைத்ததும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இச்சம்பவம் ஓல்ட் சிட்டியின் சந்திராயன்குட்டா பகுதியில் பதிவாகியுள்ளது. ஜூன் 17ஆம் தேதியன்று, தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் 14 வயது சிறுமி, தனது தாயாரைச் சந்திக்கச் சென்றபோது, ஒரு கும்பல் சிறுமி தனியாகச் செல்வதைக் கண்டு அவரை வலுக்கட்டாயமாக பந்தலகுடா பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

தாயார் புகார்
நீண்ட நேரம் ஆகியும் மகள் வராததால் அவரது தாய் அவரை பல இடங்களில் தேசியுள்ளார். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் சந்திரயாங்குட்டா காவல்துறையில் காணவில்லை என்று புகார் அளித்தார், அதன் அடிப்படையில் ஐபிசி பிரிவு 363இன் கீழ் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஜி சேகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் விசாரணையை மேற்கொண்டார்.

3 பேர் கைது
நீண்ட நேரம் ஆகியும் மகள் வராததால் அவரது தாய் அவரை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் சந்திரயாங்குட்டா காவல்துறையில் காணவில்லை என்று புகார் அளித்தார், அதன் அடிப்படையில் ஐபிசி பிரிவு 363இன் கீழ் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஜி சேகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் விசாரணையை மேற்கொண்டார்.











Click it and Unblock the Notifications