"நாங்க என்ன தவறு செஞ்சோம்? எங்களுக்கும் கொடுங்க".. என்னது வழுக்கை தலை சங்கமா? திடீர் வினோத கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கிண்டல், கேலிகளை சந்தித்து ஓய்ந்து போன எங்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தெலங்கானாவில் உள்ள வழுக்கை தலை சங்கத்தினர் வினோத கோரிக்கையை அரசுக்கு முன் வைத்துள்ளனர்.

அதுவும், இந்தக் கோரிக்கையை அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது நகைச்சுவைக்காகவோ அவர்கள் வைக்கவில்லையாம். ரொம்ப சீரியஸாதான் கேட்கிறார்களாம்.

மேலும், இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் மாநிலம் முழுவதும் பெரும் போராட்டத்தையும் நடத்தப் போவதாகவும் வழுக்தை தலை சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

வழுக்கை தலை

வழுக்கை தலை

நம் நாட்டில் மட்டுமல்ல., உலக அளவில் பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது வழுக்கை தலை. விஞ்ஞானமும் மருத்துவமும் எவ்வளவோ வளர்ந்துவிட்டன. மிகக் கொடிய நோய்களை கூட தடுக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. ஆனால், இந்த வழுக்கை விழுவதை தடுக்க இதுவரை எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் வழுக்கை தலை உள்ளவர்கள் சந்திக்கும் கிண்டல் கேலிகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. நெருங்கிய நண்பர்கள் முதல் மூன்றாம் நபர்கள் வரை கேலி செய்யும் பொருளாக வழுக்கை தலையர்கள் மாறிவிடுகிறார்கள். மேலும், இளமையில் வழுக்கை விழுந்தால் கேட்கவே வேண்டாம்.. சக நண்பர்கள் அவர்களை கேளிக்கை மையாகவே மாற்றிவிடுவார்கள். இவை அனைத்தையும் தாண்டி வழுக்கை தலை என காரணம் காட்டி அவர்களுக்கு பெண் கொடுக்கவும் யாரும் முன்வருவதில்லை.

தெலங்கானா வழுக்கை தலை சங்கம்

தெலங்கானா வழுக்கை தலை சங்கம்

இப்படி பலரின் கேலி கிண்டல்களுக்கும் உள்ளாகி விரக்தி அடைந்த நபர்கள் சேர்ந்து உருவாக்கியது தான் "தெலங்கானா வழுக்கை தலை சங்கம்". மிக சமீபமாக உருவாக்கப்பட்ட இந்த சங்கத்திற்கு தலைவர், துணைத் தலைவர் பொருளாளர் என நிர்வாகிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இந்த சங்கத்தில் சேருவதற்கு இருக்க வேண்டிய ஒரே தகுதி "வழுக்கை" தான். பாலையா என்பவரை தலைவராக கொண்டு இந்த சங்கம் இயங்கி வருகிறது. தெலங்கானா முழுவதும் தங்கள் சங்கத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் சங்கம் ஈடுபட்டுள்ளது.

"மாற்றுத் திறனாளிகளாக அறிவிக்க வேண்டும்"

இந்நிலையில்தான், இந்த வழுக்கை சங்கத்தின் தலைவர் பாலையா தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: சாதாரண மனிதர்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில்தான் கேலி கிண்டல்களுக்கு உள்ளாவார்கள். ஆனால் நாங்களோ பல வருடங்களாக தினந்தோறும் அடுத்தவர்களில் கேலிப்பொருளாக மாறி இருக்கிறோம். இதனால் தாழ்வு மனப்பான்மையுடன் பெரும் மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் நாங்கள் ஆளாகி இருக்கிறோம். வழுக்கை தலைக்கு தீர்வு இல்லை என்பதால் எங்களையும் மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

"ஓய்வூதியம் வேண்டும்"

மாற்றுத்திறனாளிகளுக்கும், தீராத நோய் உள்ளவர்களுக்கும் அரசு மாதந்தோறும் ரூ.6,000 ஓய்வூதியமாக வழங்குகிறது. இந்த ஓய்வூதியத்தை வழுக்கை தலை உள்ளவர்களுக்கும் வழங்க வேண்டும். இளம் வயதில் வழுக்கை உள்ளவர்கள், இந்தப் பணத்தை கொண்டு முடி நட்டும் சிகிச்சையாவது செய்து கொள்வார்கள். எனவே எங்கள் கோரிக்கையை நகைச்சுவையாக பார்க்காமல் தீவிரமாக அணுக வேண்டும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் இன்னும் சில மாதங்களில் தெலங்கானா முழுவதும் போராட்டம் நடத்தப்படும்" என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+