ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை.. பெற்றோரை அலைய விட்ட 3 போலீசார்.. அதிரடியாக சஸ்பெண்ட்!

ஹைதராபாத்தில் மருத்துவர் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கை பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்த போலீசார் மூன்று பேர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் மருத்துவர் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கை பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்த போலீசார் மூன்று பேர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த 26 நிரம்பிய கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

இந்த கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் போலீசார் அதன்பின் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். கொலையாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் வழக்கு

போலீஸ் வழக்கு

இந்த வழக்கில் போலீசார் தொடக்கத்தில் மிகவும் மெத்தனமாக செயல்பட்டு இருக்கிறார்கள். அந்த பெண்ணின் பெற்றோர்கள் கொடுத்த புகாரை போலீசார் முதலில் எடுக்கவில்லை. 24 மணி நேரமாக பெற்றோர்கள் முயன்று போலீசார் புகாரை எடுக்கவில்லை.

பெண்ணின் உடல்

பெண்ணின் உடல்

அந்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பின்தான் போலீசார் புகாரை எடுத்து இருக்கிறார்கள். அதுவரை, அந்த பெண் ஓடி போய் இருப்பார் என்று கூறி பெற்றோரரை அவமானப்படுத்தி உள்ளனர். முக்கியமாக சம்ஷாத் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் எம் ரவி குமார் மற்றும் தலைமை கான்ஸ்டபிள் வேணுகோபால் ரரெட்டி, சத்யநாராயண கவுடா ஆகியோர்தான் இப்படி செய்துள்ளனர்.

மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டம்

இவர்களுக்கு எதிராக மக்கள் கடந்த இரண்டு நாட்களாக போராடி வந்தனர். பெண்கள் அமைப்பை சேர்ந்த பலர் இதற்கு எதிராக போராடி வந்தனர். சமூக வலைத்தளங்களிலும் இந்த போலீசாருக்கு எதிராக கடுமையாக ககோஷங்கள் எழுப்பப்பட்டது.

நீக்கம்

நீக்கம்

இந்த நிலையில் சைபெராபாத் போலீஸ் கமிஷனர் விசி சஜ்னார் தற்போது அதிரடியாக இவர்கள் மூவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார். இவர்கள் மீது விசாரணை நடத்தி விரைவில் முடிவு எடுக்கப்படும். இவர்களின் செயல்பாடு மிகவும் தவறானது என்று கமிஷனர் சஜ்னார் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Hyderabad Doctor Murder: After the heavy protest, 3 cops suspended over delay in FIR filing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X