• search
ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மாநகராட்சி தேர்தல்.. 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜக.. தப்பியது "ஹைதராபாத்"

|

ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டு உள்ளன. பாஜக தபால் வாக்குகளில் ஆரம்பத்தில் முன்னிலை வகித்தது. ஆனால் பிறகு வாக்கு எண்ணிக்கையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி முதல் இடத்திற்கு முன்னேறியது. இப்போது உள்ள சூழ்நிலையில் பாஜக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 1ம் தேதி நடைபெற்றது. தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பாஜகவுக்காக பிரச்சாரத்திற்கு சென்றார்கள் என்றால் எந்த அளவுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுத்தது என்பதை பாருங்கள்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போதுதான், யோகி ஒரு முக்கியமான பாயிண்ட்டை முன் வைத்தார். பாஜக இங்கு வென்றால், ஹைதராபாத் நகரின் பெயர் பாக்யநகர் என மாற்றப்படும் என்று யோகி ஆதித்யநாத் வாக்குறுதி அளித்தார். இதன்பின்னணியில் பல நூற்றாண்டு கால வரலாறு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியாது. ஒரு குட்டி பிளாஷ் பேக் போய் வருவோம், வாருங்கள்.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் ரிசல்ட்.. சந்திரசேகர ராவ் கோட்டையில் மாஸ் காட்டும் பாஜக.. செம ஸ்கெட்ச்

 ஹைதராபாத் காதல் கதை

ஹைதராபாத் காதல் கதை

செவி வழி கதைப்படி, கோல்கொண்டா மன்னர்களில் ஐந்தாவது மன்னரான (ஹைதராபாத்தை நிறுவியவர்) குலி குதுப் ஷா, ஹைதராபாத் நிறுவும் முன்பே பாக்மதி என்ற இந்து பெண்ணை காதலித்து வந்தார். ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டை மற்றும் ஓல்ட் சிட்டி பகுதியை இணைக்கும் புராணாபுல் பாலத்தை அவரது தந்தை இப்ராஹிம் குதுப் ஷா தனது மகன், தனது காதலியை சந்திக்க செல்ல வசதியாக கட்டியதாக கூறப்படுகிறது.

 மனைவிக்காக பெயர் மாற்றம்

மனைவிக்காக பெயர் மாற்றம்

குலி குதுப் ஷா, பாக்மதியை மணந்தார், பின்னர் அவர் நிறுவிய புதிய நகரத்திற்கு (கோல்கொண்டா கோட்டையை விட்டு வெளியேறிய பிறகு) பாக்யநகர் என்று பெயரிட்டார். பாக்மதி பிறகு இஸ்லாத்திற்கு மாறிய பின்னர், ஹைதர் மஹால் என்ற பெயர் சூட்டப்பட்டார். எனவே, பாக்மதி என பெயர் சூட்டப்பட்ட நகரம், ஹைதராபாத் என மாற்றப்பட்டது. இவ்வாறு ஒரு கதை கூறப்பட்டாலும், இதற்கு வரலாற்று ஆதாரம் கிடையாது.

 இஸ்லாம் அடிப்படையில் பெயர்

இஸ்லாம் அடிப்படையில் பெயர்

இது ஒரு பக்கம் என்றால், நபிகள் நாயகத்தின், மருமகனின் பெயரை ஒட்டி ஹைதராபாத் நகருக்கு பெயர் சூட்டியதாகவும் கூறப்படுகிறது. எப்படியோ, இந்த நகரின் பெயர் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்தது என்பது மட்டும் உறுதி. எனவேதான், 16ம் நூற்றாண்டில் என்ன பெயர் இருந்ததோ அதே பெயரான பாக்யநகர் மீண்டும் சூட்டப்படும் என்று வாக்குறுதி அளித்தார் யோகி ஆதித்யநாத்.

 மாறுகிறதா பெயர்

மாறுகிறதா பெயர்

பாஜக ஹைதராபாத் தேர்தலில் வெற்றிக் கொடி நாட்டும் சூழ்நிலை காலையில் உருவாகிய நிலையில், மாநகராட்சியை பாஜக கைப்பற்றினால் அதன் பெயர் பாக்யநகர் என மாற்றப்படும் வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டது. மெட்ராஸ்-சென்னை என மாறியது, பம்பாய்-மும்பை என மாறியது, கல்கத்தா-கொல்கத்தா என மாற்றப்பட்டது. பெங்களூர்-பெங்களூரு என பெயர் மாற்றம் கொண்டது. அந்த பெரு நகரங்கள் வரிசையில், ஹைதராபாத் பெயரும் இப்போது மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், நண்பகலில் நிலைமை மாறியது.

 பாக்யநகர் பிரியாணி

பாக்யநகர் பிரியாணி

ஒரு வேளை பாஜக வென்றிருந்தால் ஹைதராபாத் பிரியாணி, பாக்யநகர் பிரியாணி என்றும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணி, சன்ரைசர்ஸ் பாக்யநகர் என்றும் அழைக்கப்படுமா? என்பது போன்ற கேள்விகள் எழுந்திருக்கும். ஆனால் டிஆர்எஸ் 47, ஓவைசி கட்சி 21, பாஜக 18 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே ஹைதராபாத் பெயர் தப்பியது என்கிறார்கள்.

 
 
 
English summary
Election results comes out for Hyderabad, the capital of Telangana. The BJP was initially in the lead. In the current situation, the BJP is in 3rd position, TRS to take over the corporation. So there is a chance that the name of Hyderabad will not be changed as 'Bhagyanagar'.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X