தெலுங்கானாவில் கேசிஆருக்கு சிக்கல்? தனித்து களமிறங்கும் சந்திரபாபு நாயுடு! இடையில் புகும் காங்கிரஸ்?
ஹைதராபாத்: தெலுங்கானாவில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கே சந்திரபாபு நாயுடு தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நமது அண்டை மாநிலமான தெலுங்கானாவில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே இப்போது சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் ஆட்சி நடந்து வருகிறது.

அங்கே கடந்த இரண்டு தேர்தல்களிலும் கேசிஆர் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.. அங்கு எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லாத நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் பிஆர்எஸ் களமிறங்குகிறது.
தெலுங்கானா தேர்தல்: இதற்கிடையே ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்த போது, அம்மாநிலத்தில் செல்வாக்கு செலுத்திய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இந்த முறை தெலுங்கானாவில் தனித்துக் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் டெல்லியில் பேசும் போது, தனது கட்சி நிர்வாகிகள் தெலுங்கானா தேர்தலில் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்றும் தனித்துப் போட்டியிடவே விரும்புவதாகத் தெரிவித்தார்.
தங்கள் கட்சிக்கு ஆதரவு அதிகம் இருக்கும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தாண்டு இறுதியில் நடக்கும் தேர்தலில் தெலுங்கானாவில் பாஜகவுடன் உடன் இணைந்து சந்திரபாபு நாயுடு போட்டியிடுவார் எனத் தகவல் வெளியான நிலையில், திடீரென அவர் இப்படிக் கூறியுள்ளது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
சந்திரபாபு நாயுடு: தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடு எத்தனை இடத்தில் பெற்றி பெறுகிறார் ள் என்பதைத் தாண்டி, அங்கு அவர்களின் வாக்கு வங்கி குறித்தே முக்கியமாக யோசிக்கிறார்கள்.. கடந்த 2018 சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சி 3.51 சதவிகித வாக்குகளைப் பெற்றது. சில குறிப்பிட்ட தொகுதிகளில் அவர்கள் 30% வரை வாக்குகளைப் பெற்றனர். அப்போது சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவாகத் தெலுங்கானாவில் மாபெரும் அலை வீசியது. அவர் 119இல் 88 தொகுதிகளைக் கைப்பற்றினார்.
அந்த நிலையிலும் சில தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியால் 30% வரை வாக்குகளைப் பெற முடிந்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது தெலுங்கு தேசம் கட்சியின் வாக்கு சதவிகிதம் குறைவாகத் தோன்றினாலும் மாநிலத்தில் பல தொகுதிகளில் அவர்கள் இன்னும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அளவில் வாக்குகளைப் பெறவே செய்கின்றனர். இப்போது அங்கே கேசிஆர் கட்சி, காங்கிரஸ், பாஜக என அங்கே மும்முனை போட்டி நிலவும் நிலையில், இந்த வாக்குகள் மேலும் முக்கியமானதாக மாறும்.
பிளான் என்ன: கடந்த டிசம்பர் மாதம் தெலுங்கானாவில் கம்மத்தில் கூட்டத்தை நடத்தினார் சந்திரபாபு நாயுடு.. அதற்கு மாபெரும் ஆதரவு கிடைத்த நிலையில், அதன் பின்னரே தனித்துப் போட்டியிடும் முடிவை சந்திரபாபு நாயுடு எடுத்தாக கூறப்படுகிறது. தெலுங்கானா தனியாகப் பிரிக்கப்பட்டதில் இருந்தே இங்கு நடந்த எந்தவொரு தேர்தலிலும் சந்திரபாபு நாயுடுவால் பெரியளவில் வெற்றி பெற முடியவில்லை. இந்தச் சூழலில் தான் இந்தாண்டு நடக்கும் தேர்தலில் கம்பேக் கொடுக்க பார்க்கிறார் சந்திரபாபு நாயுடு.
தெலுங்கானாவில் ஒருங்கிணைந்த கம்மம் மாவட்டம், கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் எல்லைக்கு உட்பட்ட சில தொகுதிகளில் இன்னும் சில தெலுங்கு தேசம் கட்சிக்கு வலுவான வாக்காளர்கள் இருக்கவே செய்கிறார்கள். இதையெல்லாம் யோசித்தே அவர் தனித்துக் களமிறங்க முடிவு செய்துள்ளார். அதேநேரம் சந்திரபாபு நாயுடு தனித்துப் போட்டியிட்டாலும் கூட அது பெரியளவில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்கின்றனர் பிஆர்எஸ் தலைவர்கள்.
காங்கிரஸ்: தெலுங்கு தேசம் கட்சியைத் தாண்டி தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. சில மாதங்களில் ஆளும் கட்சியில் இருந்தும் பல டாப் தலைவர்கள் காங்கிரஸில் ஐக்கியமாகியுள்ளனர். தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டியும் ஆளும் கேசிஆர் அரசுக்கு எதிராக மிகத் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். இதன் மூலம் தெலுங்கானாவில் காங்கிரசும் கம்பேக் தரும் முனைப்பில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications