"ரூ.100 கோடி!" இது புது ரெக்கார்ட்! இனி சொந்த வீடு எல்லாம் வெறும் கனவு தான் போல.. மிரள வைக்கும் ரேட்
ஹைதராபாத்: பெருநகரங்களில் வீடுகளின் விலை உச்சத்தில் சென்று வருகிறது. இதே நிலையில் சென்றால் வீடுகள் கனவாகவே போகும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
எப்படியாவது சொந்த வீடு வேண்டும் என்பது இங்குப் பலரும் முயலும் ஒன்றாக இருக்கிறது. அதிலும் நகர் மயமாக்ககல் காரணமாக முக்கிய நகரங்களில் நிலத்தின் மதிப்பு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதனால் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை போன்ற பெருநகரங்களில் வீடுகளின் விலை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இது ஏழைகள் மட்டுமின்றி நடுத்தர மக்களுக்கும் எட்டாத விஷயமாக மாற்றி வருகிறது. எந்தளவுக்கு காஸ்ட்லியாக மாறுகிறது என்பதை உணர்த்தும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஹைதராபாத்: தென்னிந்தியாவில் இப்போது இருக்கும் முக்கிய நகரங்களில் ஒன்று தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத். ஐடி துறையில் இப்போது அவர்கள் பெங்களூர் மற்றும் சென்னைக்கு கடும் போட்டி கொடுத்து வருகின்றனர். உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் ஹைதராபாத்தில் தங்கள் ஆபீசை திறந்துள்ளன. டாப் நிறுவனங்களை ஈர்க்க ஹைதராபாத் அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது.
இப்படி ஐடி நிறுவனங்களின் வேற லெவல் வளர்ச்சி காரணமாக ஹைதராபாத்தில் வீடுகளின் விலை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு உச்சம் தொட்டு வருகிறது. அங்குச் சமீபத்தில் ஆன்லைன் வழியாக நடந்த பிளாட் விற்பனை புதிய ரெக்காட்டை படைத்துள்ளது. அங்கு நிலம் ஒன்று ஆன்லைனில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அது இதுவரை இல்லாத வகையில் ஏக்கருக்கு ₹ 100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
புது ரெக்கார்ட்: தெலுங்கானாவில் இவ்வளவு காஸ்ட்லியாக நிலம் விற்கப்படுவது இதுவே முதல்முறை.. அங்குள்ள கோக்காபேட் (Kokapet ) என்ற இடத்தில் 36. ஏக்கர் நிலம் ஏலம்விடப்பட்ட நிலையில், அதை ஒரு தனியார் நிறுவனம் ₹ 362 கோடி கொடுத்து வாங்கியுள்ளனர். அதாவது ஏக்கருக்கு கிட்டத்தட்ட ₹ 100 கோடி கொடுத்துள்ளனர்.
அங்கு மொத்தம் 45.33 ஏக்கர் பரப்பளவில் ஏழு நிலங்களை ஹைதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணையம் ஏலம் விட்டது. இதில் இருந்து அவர்களுக்கு ₹ 3,320 கோடி கிடைத்துள்ளது. இதிர் சராசரியாக ஒரு ஏக்கர் ₹ 73.23 கோடிக்கு ஏலம் போயுள்ளது. குறைந்தபட்சமாக ஒரு ஏக்கர் ₹ 67.25 கோடிக்கு ஏலம் போனது.
நிலம் விற்பனை: முன்னதாக கடந்த 2021 ஜூலை மாதம் இந்த ஏரியாவுக்கான முதற்கட்ட ஏலம் நடந்தது. அப்போது அங்கு 49 ஏக்கர் விற்கப்பட்டபோது. அப்போது அதிகபட்ச ஏலமே ₹ 60 கோடியைத் தாண்டவில்லை. இப்போது விற்கப்பட்ட குறைந்தபட்ச விலை கூட இதை விட அதிகம். அப்போது சராசரியாக ₹ 40 கோடிக்கு நிலம் விற்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளில் விலை மளமளவென உயர்ந்துவிட்டதையே இது காட்டுகிறது.
இது குறித்து தெலுங்கானாவின் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சிறப்புத் தலைமைச் செயலர் அரவிந்த் குமார் கூறுகையில், "அதிநவீன உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல திட்டங்களால் நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. இங்கு 36 மற்றும் 45-மீட்டர் சாலைகள் உள்ளன. இவை எல்லாம் நாட்டில் வேறு எங்கும் கேள்விப்படாதவை. அதேபோல இந்த ஏரியாவுக்கு பிரத்யேக 240 KV துணை மின்நிலையமும் இருக்கிறது. இது அவுட்டர் ரிங் ரோட்டிற்கும், ஹைதராபாத் விமான நிலையத்திற்கும் அருகிலேயே இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
அதேநேரம் விலை இந்தளவுக்கு உயர்ந்துள்ளது பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூரைப் போல எங்கு ஹைதராபாத்திலும் வீடுகள் என்பது எட்டவே முடியாத ஒன்றாகிவிடுமோ என்று மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதேபோல குறைந்த விலை ரியல் எஸ்டேட் இல்லாமல் போனால் அது நகரத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்று வல்லுநர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications