Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவலைப்படாதீங்க.. IT, ED நம்ம கட்டுப்பாட்டில் தான் இருக்கு.. தெலங்கானா எம்எல்ஏவிடம் கூறிய பாஜக சாமியார்

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கூறி 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் எம்எல்ஏ ரோஹித் மற்றும் சுவாமிஜி இடையே நடந்த செல்போன் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் எம்எல்ஏவிடம், ‛‛வருமான வரி, அமலாக்கப்பிரிவு பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. ஏனென்றால் அது நம் கட்டுப்பாட்டில் தான்'' என கூறியுள்ளார்.

இந்த உரையாடல் பதிவை தெலங்கானா ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இது ட்ரைலர் தான். அடுத்தடுத்து இதுபோன்று நடக்கும் என கூறியுள்ளது.

முதல்வராக சந்திரசேகர ராவ்

முதல்வராக சந்திரசேகர ராவ்

தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல் அமைச்சராக அக்கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் உள்ளார். தெலங்கானா மாநிலம் புதிதாக 2014ல் உதயமானது முதல் சந்திரசேகரராவ் தான் அம்மாநில முதல்வராக உள்ளார். தொடக்கத்தில் தெலங்கானா ராஷ்டரிய சமிதிக்கும், பாஜகவுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது.

பாஜக-டிஎஸ்ஆர் மோதல்

பாஜக-டிஎஸ்ஆர் மோதல்

சமீபகாலமாக இருகட்சிகள் இடையேயான உறவு நல்ல நிலையில் இல்லை. தெலங்கானாவை மத்திய அரசு மாற்றாந்தாய் பிள்ளையாக பார்க்கிறது. வளர்ச்சி திட்டங்களுக்கு போதிய அளவுக்கு நிதி ஒதுக்கவில்லை என தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் வெளிப்படையாக மத்திய பாஜகவை விமர்சனம் செய்தனர். குறிப்பாக முதல்வர் சந்திரசேகராவ், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

தேசிய கட்சி அறிவிப்பு

தேசிய கட்சி அறிவிப்பு

தற்போது இந்த மோதல் போக்கு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. தேசிய அரசியலில் பாஜகவை எதிர்க்க சந்திரசேகரராவ் தயாராகி உள்ளார். இதற்காக புதிய தேசிய கட்சியை அவர் தொடங்கினார். இந்நிலையில் தான் தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகராவ் கட்சியின் எம்எல்ஏக்கள் பைலட் ரோஹித் ரெட்டி, காந்தாராவ், பாலா ராஜு, பீராம் ஹர்ஷ்வர்தன் ஆகியோரை விலைக்கு வாங்க மூன்று பேர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம்

எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம்

ஐதராபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து இறுதி முடிவு எடுப்பதாகவும் டீல் பேசப்பட்டுள்ளது. இதையடுத்து ரோஹித் ரெட்டி பண்ணை வீட்டுக்கு போலீசுடன் சென்றார். 4 எம்எல்ஏக்களில் முக்கியமானவராக இருப்பவருக்கு 100 கோடி ரூபாயும் , மற்ற எம்.எல்.ஏக்களுக்கு தலா 50 கோடி ரூபாயும் தருவதாக பேரம் பேசப்பட்டது.

3 பேர் கைது

3 பேர் கைது

இதையடுத்து மறைந்து இருந்த போலீசார் ஹரியானாவை சேர்ந்த பூசாரி சதீஷ் சர்மா, திருப்பதியை சேர்ந்த சாமியார் சிம்மயாஜி, தொழிலதிபர் நந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் வாங்க முயற்சிக்கிறது என தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி குற்றம்சாட்டியது. இதனை பாஜக முற்றிலுமாக மறுத்தது.

ஆடியோ வெளியீடு

ஆடியோ வெளியீடு

தெலுங்கானாவில் ஆபரேஷன் கமலா சர்ச்சையை கிளப்பியுள்ள சுவாமிஜி மற்றும் டிஆர்எஸ் தலைவர் ரோஹித் ரெட்டி இடையேயான தொலைபேசி உரையாடல் வெளியாகியுள்ளது. இந்த உரையாடலை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதோடு இது டிரெய்லர் தான். இன்னும் இதுபோன்ற விஷயங்கள் வரும் என கூறப்பட்டுள்ளது. தற்போது வெளியாகி உள்ள ஆடியோ பதிவின் விபரம் வருமாறு:

ரோஹித் ரெட்டி: எப்படி இருக்கீங்க?

சாமியார்: நந்துவுக்கும் (அமைச்சர் நந்தகிஷோர் ரெட்டி) எங்களுக்கும் இடையே சில பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. நீங்கள் பெயர்களை பகிர்ந்து கொண்டால் அதுபற்றி பேச எளிமையாக இருக்கும்.

ரோஹித்: சுவாமிஜி என்னால் முடியாது. நேரில் சந்தித்து பேசுவோம்.

சாமியார்: நிச்சயமாக... அக்டோபர் 24ம் தேதிக்குப் பிறகு ஐதராபாத் வருவேன். அப்போது இருவரும் விவாதிக்கலாம். ஐதராபாத் ஒகே தானே?

எந்த பிரச்சனையும் இல்லை

ரோஹித்: அது பிரச்சனையாக இருக்கும். இப்போது தேர்தல் வேற நடக்கிறது. நாங்கள் கண்காணிப்பு வளையத்தில் உள்ளோம். நந்து வருவாரா?

சாமியார்: இதுபற்றி நாளை கூறுகிறேன்.

ரோஹித்: உண்மையில் நந்து என்னிடம் நல்ல விஷயத்தை கூறினார். எனது பாதுகாப்பு, அரசியல் வாழ்க்கை மற்றும் பிற விஷயங்களிலும் என அனைத்தையும் பார்த்து கொள்வதாக உறுதியளித்தார்.

சாமியார்: நிச்சயமாக. இதனை மீண்டும் உறுதி செய்கிறேன். இந்த விஷயத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. எப்பொழும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை.

ரோஹித்: அதனால் நான் உங்களுக்காக 24ம் தேதி வரை காத்திருக்கிறேன்.

சாமியார்: 24 அல்ல. 24ம் தேதி வரை டெல்லியில் இருக்கிறேன். 25ம் தேதி தான் ப்ரீ ஆவேன். 27 முதல் 28 ம் தேதிக்குள் சந்திப்போம்.

ரோஹித்: எனக்கு எந்த அவசரமும் இல்லை. ஆனால் நீங்கள் தான் இன்று நாளை என கூறி வருகிறீர்கள்.

சாமியார்: நவம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மேலிட தலைவர் ஒருவரை சந்தித்து இதுபற்றி அவரிடம் சில விஷயங்களை கூற வேண்டும். அப்போது பெயர்களை கூற வேண்டும். இதனால் மற்றவர்களின் பெயர்களை கேட்கிறேன்.

ரோஹித்: மன்னித்து கொள்ளுங்கள். என்னால் பெயர்களை வெளியிட முடியாது. இதை ரகசியமாக வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சாமியார்: நாங்கள் முழுமையாக பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம். உங்களை நன்றாக கவனிப்பது எங்களின் பொறுப்பு. நீங்கள் எங்கள் பாதுகாப்பில் இருக்கும்போது ​வருமான வரி, அமலாக்கப்பிரிவு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் அது நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+