"கப்பலேறிய மானம்".. நம்பி வந்த வெளிநாட்டு பெண்ணை.. காட்டுக்குள் கதற வைத்த 2 பேர்.. என்ன நடந்தது..?

வெளிநாட்டு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் கைதானார்கள்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இந்தியாவின் மானம் வெளிநாட்டில் போய்க் கொண்டிருக்கிறது.. தன்னை நம்பி வந்த வெளிநாட்டு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர் 2 இளைஞர்கள்..!

அந்த இளம் பெண் லிதிவேனியா நாட்டை சேர்ந்தவர்.. கடந்த வாரம்தான் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்.. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக கோவா செல்வதற்காக ஒரு ஆம்னி பஸ்சில் ஏறினார்.

அதே பஸ்ஸில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் பயணம் செய்தார்.. நெல்லூர் மாவட்டம் கூடூர் அடுத்த வெங்கடபாளையத்தை சேர்ந்தவர் அந்த இளைஞர்... பெயர் சாய்குமார்.

டிக்கெட்

டிக்கெட்

பஸ்ஸில் டிக்கெட் எடுக்க தன்னுடைய நாட்டு பணத்தை அந்த பெண் எடுத்தார்.. அந்த கரன்சியை பார்த்ததும், இங்கு அந்த பணம் செல்லாது, இந்திய ரூபாய் தந்துதான் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று சொன்னார்.. இதனால் அந்த பெண் என்ன செய்வதென்று விழித்தபோதுதான், சாய்குமார் உதவிக்கு வந்தார்.. சாய்குமார் தன்னிடமிருந்த பணத்தை தந்து அந்த பெண்ணுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து தந்தார். உடனே இருவரும் நட்பானார்கள்..

 அழகிய கிராமம்

அழகிய கிராமம்

பஸ்ஸிலேயே இருவரும் பேசிக் கொண்டே போனார்கள்.. தன்னுடைய கிராமத்தை பற்றி புகழ்ந்துகூறிய சாய்குமார், அந்த பெண்ணை அங்கு வரும்படி கூறினார்.. அப்படியே, இந்திய கரன்சியை அங்குள்ள வங்கியில் மாற்றி தருவதாகவும் சொன்னார்.. இந்த அழைப்பை ஏற்று இளம்பெண்ணும் சாய் பிரசாத்துடன், அவரது கிராமத்துக்கு சென்றார்.. தன்னுடைய குடும்பத்தினர் அனைவரிடமும் இளம்பெண்ணை சாய்பிரசாத் அறிமுகம் செய்து வைத்தார்.. வீட்டிலேயே தங்க வைத்தார்.. சாப்பாடு போட்டார்..

 பலாத்காரம்

பலாத்காரம்

பிறகு, கரன்சியை மாற்றுவதாக சொல்லி, பைக்கில் உட்கார வைத்து வெளியே அழைத்து சென்றார்.. அப்போது ஷேக் அபித் என்ற நண்பரையும் சாய்பிரசாத் துணைக்கு அழைத்து கொண்டார். ஆனால், பைக் நேராக சைதாபுரம் அடுத்த ராவூர் காட்டுப்பகுதிக்கு சென்றது.. அங்கு சாய்குமார், ஷேக் அபித் 2 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றனர்... இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த பெண், தன்னை காப்பாற்றி கொள்ள போராடினார்.. அலறினார்.. அந்த அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடிசசென்று இளம்பெண்ணை மீட்டனர்..

 அலறல் சத்தம்

அலறல் சத்தம்

சைதாதபுரம் போலீசாருக்கும் தகவல் தந்தனர்.. அதற்குள் 2 இளைஞர்களும் தப்பி ஓடிவிட்டனர்.. போலீசார் விரைந்து வந்து பெண்ணை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்... காட்டுக்குள்தான் இளைஞர்கள் பதுங்கி இருப்பதாக தெரிந்ததும், அங்கேயே தேடுதல் வேட்டை நடத்தி, இறுதியில் பதுங்கி கொண்டிருந்த 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்... போக்சோ சட்டம் அவர்கள் மீது பாய்ந்துள்ளது. விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

 சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு

இந்த சம்பவத்திற்கு ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.. இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு இளம்பெண்ணை ஆந்திராவில் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டது என்றும், சர்வதேச மகளிர் தினத்தில் பெண்ணிற்கு ஏற்பட்ட அவமானம் ஆந்திராவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுகிறது, அந்த பெண்ணிற்கு நீதி வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+