For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாடிக்கையாளர்கள் கோரிக்கைக்கு ஏற்ப தனித்துவ பொருட்கள்.. அசத்தும் Ikikai

Google Oneindia Tamil News

நல்லது ஒன்றை துவங்க வேண்டும் என்ற எண்ணம் நம்மை வலிமைப்படுத்தும். சூடான ஒரு கப் காபி பருகியபடி, நண்பர்களோடு அமர்ந்து பேசியபடி இருந்தபோதுதான் அந்த யோசனை வந்தது. டிசைன் மூலம், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் கான்செப்ட்டை உருவாக்கினோம். பெண்களால் நடத்தப்படும் சிறு தொழில்கள், சமூக நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வளரும் கலைஞர்கள் ஆகியோருக்கு உதவும், ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களோடு இணைந்து செயல்படுவதற்கான யோசனையால் உதயமானதுதான், Ikikai.

Iki என்ற ஜப்பான் மொழி பெயருக்கு 'அழகியல்' என்பது அர்த்தம். Kai என்றால், மறுசீரமைப்பு என்பது அர்த்தம். இதையெல்லாம் சேர்த்துத்தான், தனித்தன்மை, அழகு மற்றும் மாற்றியமைப்பதற்கான வேகம் ஆகியவற்றை குறிக்கும் ஹம்மிங் பறவை Ikikai பிராண்டின் சின்னமாக மாறியது.

Ikikai, Creating social impact through design

இப்போதைய கால கட்டத்தில், வாடிக்கையாளர்கள் ரொம்பவே விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். ஒருவர் வாங்கும் பொருளை வைத்தே, அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். அதே மாதிரிதான், ikikai டிசைன், சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடனான வாழ்க்கை முறையை, எடுத்துக் காட்டுகிறது.

Ikikai குழு மற்றும் அதன் நெட்வொர்க், தனது வாடிக்கையாளர்களுக்காக, அவர்கள் கோரிக்கையை கேட்டு தனித்துவமாக பொருட்களை வடிவமைத்துக் கொடுக்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த டிசைன் முதல், ஒவ்வொரு தயாரிப்பையும் பேக்கேஜிங் செய்வது வரை பன்முகத்தன்மையை பராமரித்து, நல்லது செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை ஊக்குவிக்கிறது.

Ikikai, Creating social impact through design

இஷா, க்ஷிரா மற்றும் பராக், ஆகிய மூன்று அனுபவசாலிகளால் இணைந்து நிறுவப்பட்டது ikikai. நேர்மறையான மாற்றங்களை ஒருங்கிணைக்கும் பங்காளியாக இருக்கிறது, ikikai. இன்றைய வாடிக்கையாளர்கள், தங்களது தேர்வுகளை மிகவும் கவனத்தோடு செய்கிறார்கள். இன்று மற்றும் வருங்காலத்தில், சமூகத்தில் கால்த்தடம் பதிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். இதற்கு ikikai அவர்களுக்கு உதவுகிறது. வாருங்கள், www.ikikai.co உடன், நல்லவற்றை செய்வதற்கு ஒரு பங்காளியாக இருங்கள்.

English summary
A thought of starting something good is empowering. Over a hot cup of coffee, a bunch of friends, started building on a concept inspired by the idea of creating social impact through design, which will enable change, drive success for emerging artists, small businesses led predominantly by women and social organisations/ NGO, strengthening them through a collaborative partnership . And with that, ikikai was born.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X