மத்திய பிரதேசத்தில் சரக்கு ரயில் விபத்து.. 10 பெட்டிகள் தடம் புரண்டன!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சத்னா: மத்தியபிரதேசத்தில் சரக்கு ரயில் விபத்துக்குள்ளானதில் 10 பெட்டிகள் தடம்புரண்டன.

மத்திய பிரதேச மாநிலம் சத்னா என்ற பகுதியில் நேற்று நள்ளிரவில் மும்பை-ஹவுரா செல்லும் ரயில்பாதையில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.

10 boxes were derailed in a freight train accident in Madhya Pradesh

சத்னா ரீவா பகுதியில் ரயிலின் 13- வது பெட்டி திடீரென தடம் புரண்டது. இதையடுத்து பின்னால் இருந்த மேலும் 10 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி தடம் புரண்டன.

தகவலறிந்த ரயில்வே மீட்பு படையினர் தண்டவாளத்தை இரவோடு இரவாக சீரமைத்தனர். இந்த விபத்தில் உயிர் சேதம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரயில் தடம்புரண்டதற்கு சதிவேலை ஏதும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
10 boxes were derailed in a freight train accident in Madhya Pradesh. Police inquire about it.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற